Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... தொலைபேசி மூலம் சாட்சி கொடுப்பது

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... தொலைபேசி மூலம் சாட்சி கொடுப்பது

ஏன் முக்கியம்: தொலைபேசியைப் பயன்படுத்தி ‘நல்ல செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுக்க’ முடியும். (அப் 20:24) * நேரில் சந்திக்க முடியாத ஒருவருக்கு சாட்சி கொடுக்க இது உதவுகிறது.

எப்படிச் செய்வது:

  • தயார் செய்யுங்கள்: பொருத்தமான ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுங்கள். அது சம்பந்தமாக நீங்கள் சொல்ல விரும்பும் குறிப்புகளை எழுதுங்கள். அதோடு, ஃபோன் செய்வதற்கான காரணத்தையும் சுருக்கமாகத் தயாரித்து வைத்துக்கொள்ளலாம். அப்போதுதான், ஒருவேளை வீட்டுக்காரர் உங்களுடைய தொலைபேசி அழைப்பை ஏற்காதபோது உங்களால் வாய்ஸ்மெயில் அனுப்ப முடியும். நீங்கள் தயாரித்த குறிப்புகளை மேஜையில் வைத்துக்கொள்ளுங்கள். அதோடு, உங்களுக்குத் தேவைப்படும் மற்ற பிரசுரங்களை அல்லது உங்கள் எலக்ட்ரானிக் கருவியில் JW Library® அல்லது jw.org®-ஐத் திறந்து வைத்துக்கொள்ளுங்கள்

  • நிதானமாக இருங்கள்: இயல்பாகப் பேசுங்கள். அந்த நபரை நேரில் பார்த்துப் பேசுவதுபோல் சிரித்த முகத்தோடும் சைகைகளோடும் பேசுங்கள். நிறுத்தி நிறுத்திப் பேசாதீர்கள். உங்களோடு யாரையாவது துணைக்கு வைத்துக்கொள்வது நல்லது. வீட்டுக்காரர் ஏதாவது கேள்வி கேட்டால், உங்களோடு இருப்பவருக்குக் கேட்கும் விதத்தில் அதைத் திரும்பச் சொல்லுங்கள். அப்போதுதான், அந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க அவரால் உங்களுக்கு உதவ முடியும்

  • மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்: அந்த நபர் ஆர்வம் காட்டினால், அடுத்த முறை ஃபோனில் பதில்சொல்வதற்கு வசதியாக அவரிடம் ஒரு கேள்வியைக் கேளுங்கள். ஒரு பிரசுரத்தை ஈ-மெயில் மூலமாகவோ நேரில் சந்தித்தோ தபால் மூலமாகவோ அவருக்குக் கொடுக்கலாம். நம்முடைய வீடியோக்களிலோ கட்டுரைகளிலோ ஒன்றை அவருக்கு மெசேஜ் அல்லது ஈ-மெயில் மூலமாக அனுப்பலாம். பொருத்தமான சமயத்தில், நம் வெப்சைட்டில் இருக்கிற பைபிள் படிப்புக்கு உதவும் வேறொரு பிரசுரத்தைப் பற்றி அவரிடம் சொல்லலாம்

^ பாரா. 3 உங்கள் பகுதியில், தொலைபேசி மூலம் சாட்சி கொடுப்பது பொருத்தமாக இருந்தால், தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்துவது சம்பந்தமான சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அதைச் செய்ய வேண்டும்.