Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 8-9

யெகோவாவின் ஆசீர்வாதத்துக்கு அத்தாட்சி

யெகோவாவின் ஆசீர்வாதத்துக்கு அத்தாட்சி

8:6-9, 12; 9:1-5, 23, 24

ஆரோனும் அவருடைய மகன்களும் குருமார்களாக நியமிக்கப்பட்டபோது கொடுத்த முதல் தகன பலியை யெகோவாவிடமிருந்து வந்த நெருப்பு விழுங்கியது. குருமார் ஏற்பாட்டை யெகோவா அங்கீகரித்ததை அது காட்டியது. இதன் மூலம், அவர்களுக்கு முழு ஆதரவு கொடுக்கும்படி அங்கிருந்த இஸ்ரவேலர்களை யெகோவா உற்சாகப்படுத்தினார். ராஜாவாக இருக்கும் இயேசு கிறிஸ்துவை மாபெரும் தலைமைக் குருவாக யெகோவா இன்று பயன்படுத்துகிறார். (எபி 9:11, 12) 1919-ல் பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் ஒரு சிறு தொகுதியை ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையாக’ இயேசு நியமித்தார். (மத் 24:45) அவர்களுக்கு யெகோவாவின் ஆசீர்வாதமும், ஆதரவும் இருக்கிறது என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

  • கடுமையான துன்புறுத்தலின் மத்தியிலும், உண்மையும் விவேகமும் உள்ள அடிமை ஆன்மீக உணவைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்

  • ஏற்கெனவே முன்னறிவித்தபடி, நல்ல செய்தி “எல்லா தேசத்தாருக்கும்” சொல்லப்பட்டு வருகிறது.—மத் 24:14

உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கு நம்முடைய முழு ஆதரவை எப்படிக் கொடுக்கலாம்?