Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 1-3

பலிகளைச் செலுத்துவதன் நோக்கம்

பலிகளைச் செலுத்துவதன் நோக்கம்

1:3; 2:1, 12; 3:1

திருச்சட்டத்தின்படி இஸ்ரவேலர்கள் கொடுத்த பலிகளும் காணிக்கைகளும் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தன. அவை, இயேசுவின் மீட்பு பலிக்கும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளுக்கும் அடையாளமாக இருந்தன.—எபி 8:3-5; 9:9; 10:5-10.

  • இஸ்ரவேலர்கள் எந்தக் குறையும் இல்லாத மிருகங்களைப் பலி கொடுத்தார்கள். அதேபோல இயேசுவும் எந்தக் குறையும் இல்லாத தன்னுடைய பரிபூரண உடலையே பலியாகக் கொடுத்தார்.—1பே 1:18, 19

  • தகன பலிகள் முழுமையாகக் கடவுளுக்குக் கொடுக்கப்பட்டன. அதேபோல, இயேசுவும் தன்னை முழுமையாக யெகோவாவுக்குக் கொடுத்தார்

  • கடவுள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சமாதான பலிகளைச் செலுத்தியவர்கள் அவரோடு சமாதானத்தை அனுபவித்தார்கள். அதேபோல, எஜமானுடைய இரவு விருந்தில் பங்கெடுக்கிற பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் கடவுளோடு சமாதானத்தை அனுபவிக்கிறார்கள்