இப்படிப் பேசலாம்
கஷ்டங்களுக்கு முடிவு வருமா? (T-34 துண்டுப்பிரதி)
கேள்வி: உள்ளூரில் நடந்த ஒரு சோகமான சம்பவத்தை சொன்ன பிறகு, இப்படிக் கேளுங்கள் : நாம படுற கஷ்டத்துக்கெல்லாம் என்னைக்காவது முடிவு வரும்னு நினைக்கிறீங்களா? இத பத்தி கடவுள் என்ன சொல்லியிருக்கார்னு உங்களுக்கு காட்டட்டுமா?
வசனம்: வெளி 21:3, 4
பிரசுரம்: கடவுள் சொன்னது கண்டிப்பா நடக்கும். அதுக்கு ரெண்டு காரணங்கள் இதுல சொல்லியிருக்கு.
கஷ்டங்களுக்கு முடிவு வருமா? (T-34 துண்டுப்பிரதி) பின் பக்கம்
கேள்வி: நாம வாழ்ற இந்த உலகத்துல நிறைய கஷ்டங்கள அனுபவிக்கிறோம், இதெல்லாம் பார்த்துட்டு கடவுள் ஏன் சும்மா இருக்காருன்னு என்னைக்காவது யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா. ஒரு பழைய புத்தகத்தில இதுக்கான பதில் ரொம்ப தெளிவா இருக்கு. அத உங்களுக்கு காட்டட்டுமா?
வசனம்: ரோ 5:12
பிரசுரம்: கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி புத்தகம் பாடம் 8-ல இத பத்தி தெளிவா விளக்கியிருக்காங்க.
கடவுள் சொல்வதைக் கேளுங்கள்
கேள்வி: [பக்கங்கள் 2, 3-ஐ காட்டுங்கள்.] இந்த மாதிரி ஒரு இடத்தில வாழணும்னு நீங்க ஆசைப்படுறீங்களா? [பதில் சொல்ல நேரம் கொடுங்கள்.]
வசனம்: சங் 37:
பிரசுரம்: இந்த மாதிரி ஒரு இடத்தில சந்தோஷமா வாழணும்னா கடவுள் சொல்றத கேட்டு நடக்கணும். அது எப்படினு இந்த புத்தகம் சொல்லுது. [பக்கங்கள் 4, 5-ஐ காட்டி விளக்குங்கள்.]
நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.