Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

எல்லாரையும் நினைவு நாளுக்கு கூப்பிடுங்கள்

எல்லாரையும் நினைவு நாளுக்கு கூப்பிடுங்கள்

பிப்ரவரி 27 முதல் நம்முடைய நண்பர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் என எல்லாரையும் நினைவு நாளுக்கு கூப்பிடுவோம். இந்த விசேஷ ஊழியத்தின்போது ஆர்வம் காட்டின நபர்களை மறக்காமல் போய் பார்க்க வேண்டும்.

இப்படி செய்துபாருங்கள்

என்ன சொல்லி அழைப்பிதழை கொடுக்கலாம்

“முக்கியமான ஒரு நிகழ்ச்சிக்கு உங்கள கூப்பிட வந்திருக்கோம். மார்ச் 23-ம் தேதி இயேசுவோட மரண நாள் வருது. அன்னைக்கு சாயங்காலம் பைபிள்ல இருந்து ஒரு பேச்சை கொடுப்பாங்க. இயேசு நமக்காக ஏன் இறந்தார்னு அந்த பேச்சுல சொல்வாங்க. உலகம் முழுசும் நிறைய இடங்கள்ல இந்த நிகழ்ச்சி நடக்கும். லட்சக்கணக்கான பேர் அந்த நிகழ்ச்சிக்கு வருவாங்க. உங்க வீட்டு பக்கத்தில எந்த இடத்தில எத்தன மணிக்கு நடக்குதுனு இந்த அழைப்பிதழ்ல இருக்கு. உங்களால வர முடிஞ்சா கண்டிப்பா வாங்க.”

ஆர்வமாக கேட்டால் . . .

  • கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா? துண்டுப்பிரதியை கொடுங்கள்

    ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள்.

  • நினைவு நாள் வீடியோவை காட்டுங்கள்

    ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள்.

நீங்கள் மறுபடியும் போய் பார்க்கும்போது . . .

  • பைபிளை ஏன் படிக்க வேண்டும் வீடியோவை காட்டுங்கள்

    பைபிள் படிப்புக்கு பயன்படுத்தும் ஒரு புத்தகத்தை கொடுங்கள்.

  • பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை கொடுங்கள்

    இந்தப் புத்தகத்தை கொடுத்து, நினைவு நாளை பற்றி பக்கங்கள் 206-208-ல் இருக்கும் விஷயங்களை சொல்லுங்கள்.

  • கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டை கொடுங்கள்

    இந்த சிற்றேட்டை கொடுத்து, இயேசு நமக்காக ஏன் இறந்தார் என்பதை பக்கங்கள் 18-19-ல் இருந்து விளக்கி சொல்லுங்கள்.