பிப்ரவரி 29 —மார்ச் 6
எஸ்தர் 1–5
பாட்டு 86; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கடவுளுடைய மக்களுக்காக எஸ்தர் துணிந்து செயல்பட்டாள்”: (10 நிமி.)
[எஸ்தர் புத்தகத்துக்கு அறிமுகம் வீடியோவை காட்டுங்கள்.]
எஸ்த 3:5-9—கடவுளுடைய மக்களை ஆமான் அழிக்க நினைத்தான் (ia 131 ¶18-19; w06 3/1 8 ¶4)
எஸ்த 4:11–5:2—எஸ்தரின் மரண பயத்தை விசுவாசம் ஜெயித்தது (ia 125 ¶2; 134 ¶24-26; w12 2/15 13 ¶14, 15)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
எஸ்த 2:15—பணிவையும் தன்னடக்கத்தையும் எஸ்தர் எப்படி காட்டினாள்? (w06 3/1 9 ¶7)
எஸ்த 3:2-4—ஆமானுக்கு முன்னால் தலைவணங்க மொர்தெகாய் ஏன் மறுத்தார்? (ia 131 ¶18; w06 3/1 9 ¶5)
எஸ்தர் 1 முதல் 5 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த அதிகாரங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: எஸ்த 1:1-15 (4 நிமிடத்திற்குள்)
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டை கொடுங்கள். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டை வாங்கிக்கொண்ட ஒருவரை மறுசந்திப்பு செய்யுங்கள். பக்கங்கள் 2-3 இருக்கும் விஷயங்களை கலந்து பேசுங்கள். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டை வாங்கிக்கொண்ட ஒருவருக்கு, கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டில் பக்கங்கள் 4-5-ஐ பயன்படுத்தி பைபிள் படிப்பு நடத்துங்கள். (km 7/12 2-3 ¶4)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 71
சபை தேவைகள்: (10 நிமி.)
கூட்டங்களில் ஏற்பட்ட புதிய மாற்றத்தினாலும், பயிற்சி புத்தகத்தினாலும் என்ன நன்மைகள் கிடைத்திருக்கிறது: (5 நிமி.) கலந்து பேசுங்கள். கூட்டத்தில் ஏற்பட்ட புதிய மாற்றங்களில் இருந்து எப்படியெல்லாம் நன்மை அடைந்திருக்கிறார்கள் என்று கேளுங்கள். இந்த கூட்டத்தில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள நன்றாக தயாரிக்க சொல்லி உற்சாகப்படுத்துங்கள்.
சபை பைபிள் படிப்பு: பைபிள் கதை 103 (30 நிமி.)
முடிவு குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 149 (14); ஜெபம்