Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

படைப்பாளர்மீது பலமான விசுவாசத்தை வளர்க்க பிள்ளைகளுக்கு உதவுங்கள்

படைப்பாளர்மீது பலமான விசுவாசத்தை வளர்க்க பிள்ளைகளுக்கு உதவுங்கள்

படைப்புகள் யெகோவாவின் மகிமையை சொல்கின்றன. (சங் 19:1-4; 139:14) ஆனால், உயிர் எப்படித் தோன்றியது என்பதைப் பற்றி சாத்தானுடைய உலகம் பொய்யான விஷயங்களைச் சொல்லித்தருகிறது. இது கடவுளை ரொம்பவே அவமதிக்கிறது. (ரோ 1:18-25) அப்படிப்பட்ட கருத்துகள் உங்கள் பிள்ளைகளின் மனதில் வேர்விடாமல் இருக்க நீங்கள் என்ன செய்யலாம்? யெகோவா உண்மையிலேயே இருக்கிறார் என்பதை சின்ன வயதிலிருந்தே பிள்ளைகள் நம்ப உதவி செய்யுங்கள். அதோடு, அவர்கள்மீது யெகோவாவுக்கு அக்கறை இருக்கிறது என்பதைச் சொல்லிக்கொடுங்கள். (2கொ 10:4, 5; எபே 6:16) பள்ளியில் அவர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பக்குவமாக கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுடைய மனதில் இருக்கும் விஷயங்களை மொண்டெடுக்க அமைப்பு செய்திருக்கும் எல்லா ஏற்பாடுகளையும் நன்றாக பயன்படுத்துங்கள்.—நீதி 20:5; யாக் 1:19.

உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்... கடவுள் நம்பிக்கையைப் பற்றி... என்ற வீடியோவைப் பார்த்த பிறகு இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்:

  • கடவுள் நம்பிக்கையைப் பற்றி என்ன பொதுவான கட்டுக் கதைகள் இருக்கின்றன?

  • பள்ளியில் என்ன சொல்லிக்கொடுக்கிறார்கள்?

  • யெகோவா உண்மையிலேயே இருக்கிறார் என்று நீங்கள் ஏன் நம்புகிறீர்கள்?

  • கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்பதை மற்றவர்களுக்கு எப்படி நிரூபிப்பீர்கள்?