Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பைபிள் பிரசுரங்களை ஞானமாக பயன்படுத்துங்கள்

பைபிள் பிரசுரங்களை ஞானமாக பயன்படுத்துங்கள்

“இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்” என்று இயேசு சொன்னார். (மத் 10:8) இயேசு சொன்ன இந்த அறிவுரைக்கு கீழ்ப்படிந்து ஊழியத்தில் நாம் கொடுக்கும் பைபிளுக்கோ பிரசுரங்களுக்கோ பணம் வாங்குவதில்லை. (2கொ 2:17) கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் அருமையான விஷயங்கள்தான் நம் பிரசுரங்களில் இருக்கின்றன. நிறைய சகோதர சகோதரிகள் கடினமாக உழைத்து நம் பிரசுரங்களை அச்சடிக்கிறார்கள், அதை உலகம் முழுவதும் இருக்கும் சபைகளுக்கு அனுப்புகிறார்கள். இதற்கெல்லாம் நிறைய பணமும் செலவாகிறது. அதனால், நமக்கு தேவையானதை மட்டுமே நாம் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

மற்றவர்களுக்கு பிரசுரங்களை கொடுக்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும். பொது ஊழியம் செய்யும்போதும் அதை ஞானமாக பயன்படுத்த வேண்டும். (மத் 7:6) வெறுமனே பார்ப்பவர்கள் எல்லாரிடமும் பிரசுரங்களை கொடுக்காதீர்கள். அவர்களோடு பேசி, ஆர்வம் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை ஒரு குறிப்பிட்ட பிரசுரத்தை யாராவது விரும்பி கேட்டால் அதை கொடுங்கள்.—நீதி 3:27, 28.