Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

உங்கள் நம்பிக்கையில் மகிழ்ச்சியாய் இருங்கள்!

உங்கள் நம்பிக்கையில் மகிழ்ச்சியாய் இருங்கள்!

நம் நம்பிக்கையை ஒரு நங்கூரம் என்று சொல்லலாம். (எபி 6:19) புயல் போல பிரச்சினைகள் வந்தாலும் நம்முடைய விசுவாசக் கப்பல் மூழ்காமல் இருக்க இது உதவுகிறது. (1தீ 1:18, 19) எப்படிப்பட்ட பிரச்சினைகள் வரலாம்? சொத்துபத்துகளை நாம் இழந்துவிடலாம், ஏமாற்றங்கள் வரலாம், தீராத வியாதி இருக்கலாம், பாசமுள்ள யாரையாவது பறிக்கொடுத்திருக்கலாம், அல்லது யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியாத மாதிரி ஏதாவது சூழ்நிலை வரலாம்.

கடவுள் நமக்கு எதிர்காலத்தில் கொடுக்கப்போகும் பரிசை நம் கண் முன்னால் வைக்க விசுவாசமும் நம்பிக்கையும் உதவும். (2கொ 4:16-18; எபி 11:13, 26, 27) நமக்கு பரலோகத்தில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, அந்த நம்பிக்கையைப் பலப்படுத்த பைபிளைப் படிக்க வேண்டும். கடவுள் கொடுக்கப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் சோதனைகள் வந்தாலும் சந்தோஷமாக வாழ முடியும்.—1பே 1:6, 7.

நம்பிக்கையில் மகிழ்ச்சியாய் இருங்கள்! என்ற வீடியோவைப் பார்த்த பிறகு இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்:

  • மோசே நமக்கு ஒரு நல்ல உதாரணம் என்று எப்படிச் சொல்லலாம்?

  • குடும்பத் தலைவர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது?

  • குடும்ப வழிபாட்டில் நீங்கள் எதைப் பற்றியெல்லாம் படிக்கலாம்?

  • சோதனைகளைத் தைரியமாக சமாளிக்க விசுவாசமும் நம்பிக்கையும் எப்படி உதவும்?

  • நீங்கள் எதற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறீர்கள்?