புதிய வானம், புதிய பூமி—அளவில்லாத சந்தோஷத்தைத் தரும்
யெகோவா எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்று ஏசாயா 65-வது அதிகாரத்தில் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது நிச்சயம் நடக்கும். அதனால்தான் அதெல்லாம் ஏற்கெனவே நடப்பதுபோல் சொல்லியிருக்கிறார்.
யெகோவா புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறார். முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது
புதிய வானம் எதைக் குறிக்கிறது?
-
பூமியில் நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டும் ஒரு புதிய அரசாங்கத்தைக் குறிக்கிறது
-
கடவுளுடைய அந்த அரசாங்கத்தின் ராஜாவாக கிறிஸ்து நியமிக்கப்பட்டார். அதன் ஆட்சி 1914-ல் ஆரம்பமானது
புதிய பூமி எதைக் குறிக்கிறது?
-
புதிய அரசாங்கத்துக்கு மனதார கீழ்ப்படிந்து வாழும் மக்களைக் குறிக்கிறது. இவர்கள் வித்தியாசமான நாட்டை, இனத்தை, மொழியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்
முன்பு பட்ட கஷ்டங்கள் இனி நம் மனதுக்கு வராது என்று எப்படி சொல்லலாம்?
-
உடலளவிலும் மனதளவிலும் நாம் பட்ட எந்த கஷ்டமும் இனி இருக்காது. அது நம் ஞாபகத்துக்குக்கூட வராது
-
கீழ்ப்படிதலுள்ள மக்கள் எப்போதும் சந்தோஷமாக வாழ்வார்கள். பசுமையான நினைவுகளோடு ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும். அந்த நினைவுகள் எப்போதும் நம் மனதைவிட்டு நீங்காது