கம்போடியாவில் சத்தியத்தைக் கற்றுக்கொடுக்கிறார்கள்

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் பிப்ரவரி 2018  

இப்படிப் பேசலாம்

இந்தக் கேள்விகளைப் பயன்படுத்தி எப்படிப் பேசலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்: இந்த விஞ்ஞான உலகத்துல, கடவுள் சொல்ற விஷயங்கள் நமக்கு உதவும்னு நினைக்கிறீங்களா? பைபிள்ல இருக்கற ஆலோசனைகள் நடைமுறைக்கு ஒத்துவருமா?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமை

இந்த உவமையில் இயேசு எதைப் பற்றி விளக்குகிறார்? விதைப்பவர், எதிரி, மற்றும் அறுவடை செய்பவர்கள் யாரைக் குறிக்கிறார்கள்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட உவமைகளும் அவற்றிலுள்ள பாடங்களும்

ஆழமான ஆன்மீகப் பாடங்களைக் கற்றுக்கொடுக்க இயேசு எளிமையான உவமைகளைப் பயன்படுத்தினார். மத்தேயு 13-ம் அதிகாரத்திலிருந்து வேறு என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

சிலரைக்கொண்டு பலருக்கு உணவளித்தல்

வெறும் ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் வைத்து ஆயிரக்கணக்கானவர்களுக்கு உணவளிக்கும்படி தன் சீஷர்களுக்கு இயேசு அறிவுரை கொடுத்தார். அப்போது என்ன நடந்தது? இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

“உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்”

“உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்” என்ற கட்டளையை இயேசு வலியுறுத்திப் பேசினார். சொல்லப்போனால், என்றென்றும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளை இது!

பைபிளில் இருக்கும் புதையல்கள்

நீங்கள் யாரைப் போல் யோசிக்கிறீர்கள்?

கடவுளுடைய விருப்பத்தின்படி வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? தவறான யோசனைகளைத் தவிர்ப்பதற்கு நாம் செய்ய வேண்டிய மூன்று விஷயங்களை இயேசு சொன்னார்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—கேள்விகளைத் திறமையாகப் பயன்படுத்துவது

தன்னுடைய சீஷர்களுக்கு வெவ்வேறு பாடங்களைக் கற்றுக்கொடுப்பதற்காக இயேசு கேள்விகளைக் கேட்டார். ஊழியத்தில் அவரைப் போலவே நாம் எப்படி திறமையாகக் கற்றுக்கொடுக்கலாம்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

பாவம் செய்யத் தூண்டாதீர்கள்​—⁠உங்களையும் சரி, மற்றவர்களையும் சரி!

பாவம் செய்வது அல்லது மற்றவர்களைப் பாவம் செய்யத் தூண்டுவது எவ்வளவு பெரிய பாவம் என்பதைக் காட்ட இயேசு உவமைகளைப் பயன்படுத்தினார். உங்கள் வாழ்க்கையில் எது உங்களைப் பாவம் செய்ய வைக்கலாம்?