Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

“உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்”

“உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்”

“உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்” என்ற கட்டளையை இயேசு வலியுறுத்திப் பேசினார். (யாத் 20:12; மத் 15:⁠4) இயேசுவால் எந்தத் தயக்கமும் இல்லாமல் இந்தக் கட்டளையைப் பற்றிப் பேச முடிந்தது. ஏனென்றால், இளவயதில் அவர் தன் பெற்றோருக்கு “கீழ்ப்படிந்து நடந்தார்.” (லூ 2:​51, அடிக்குறிப்பு) வளர்ந்த பிறகும்கூட தன் கடமையை செய்தார். அதாவது, தன் மரணத்துக்குப் பின் தன் அம்மாவை கவனித்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்.​—⁠யோவா 19:​26, 27.

இன்றும்கூட கிறிஸ்தவ இளைஞர்கள் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதன் மூலமும், அவர்களிடம் மரியாதையோடு பேசுவதன் மூலமும் அவர்களுக்கு மதிப்பு கொடுக்கிறார்கள். சொல்லப்போனால், பெற்றோருக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற கட்டளை என்றென்றும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று! வயதான பெற்றோர் சொல்லும் ஞானமான அறிவுரையைக் கேட்பதன் மூலம், அவர்களுக்குத் தொடர்ந்து நாம் மதிப்பு காட்ட வேண்டும். (நீதி 23:22) வயதான பெற்றோரின் உணர்ச்சிகளைப் புரிந்து நடந்துகொள்ளும்போதும் பொருளாதாரத் தேவைகளை கவனித்துக்கொள்ளும்போதும் நாம் அவர்களை மதிக்கிறோம். (1தீ 5:⁠8) நாம் பெரியவர்களாக இருந்தாலும் சரி சிறியவர்களாக இருந்தாலும் சரி, நம் பெற்றோரோடு நல்ல பேச்சுத்தொடர்பை வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு மதிப்பு காட்ட இது ஒரு முக்கிய வழி!

அப்பா அம்மாகிட்ட எப்படிப் பேசணும்? என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  •  உங்கள் அப்பா அம்மாவிடம் பேசுவது உங்களுக்கு ஏன் கஷ்டமாக இருக்கலாம்?

  •  உங்கள் அப்பா அம்மாவிடம் பேசும்போது நீங்கள் எப்படி அவர்களுக்கு மதிப்புக் கொடுக்கலாம்?

  •  உங்கள் அப்பா அம்மாவிடம் பேசுவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வீண் போகாது என்று ஏன் சொல்லலாம்? (நீதி 15:⁠22)

    பெற்றோரிடம் பேசுவது வாழ்க்கையில் வெற்றிபெற உங்களுக்கு உதவும்