Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—கேள்விகளைத் திறமையாகப் பயன்படுத்துவது

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—கேள்விகளைத் திறமையாகப் பயன்படுத்துவது

ஏன் முக்கியம்: “மனிதனுடைய உள்ளத்தில் இருக்கும் யோசனைகள் ஆழமான தண்ணீர்போல்” இருக்கின்றன; கேள்விகள்தான், அவற்றை மொண்டெடுக்கும் வாளி! (நீதி 20:5) கேட்பவரை மனம்திறந்து பேச வைக்க கேள்விகள் உதவும். நாம் நன்றாக யோசித்து கேள்விகள் கேட்கும்போது, அவர்களுடைய மனதிலுள்ளதைத் தெரிந்துகொள்ள முடியும். இயேசு கேள்விகளைத் திறமையாகப் பயன்படுத்தினார். நாம் எப்படி அவரைப் பின்பற்றலாம்?

எப்படிச் செய்வது:

  • நோக்குநிலை கேள்விகளைக் கேளுங்கள். தன் சீஷர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள இயேசு அடுத்தடுத்து பல கேள்விகளைக் கேட்டார். (மத் 16:13-16; be பக். 238 பாரா. 3-5) என்னென்ன நோக்குநிலை கேள்விகளை நீங்கள் கேட்கலாம்?

  • வழிநடத்தும் கேள்விகளைக் கேளுங்கள். பேதுருவின் யோசனையைத் திருத்துவதற்காக இயேசு கேள்விகளைக் கேட்டார். பிறகு, சில பதில்களைச் சொல்லிவிட்டு, அவற்றில் எது சரியென்று கேட்டார். இப்படி, சரியான முடிவுக்கு வர பேதுருவுக்கு உதவினார். (மத் 17:24-26) நீங்களும் எப்படி வழிநடத்தும் கேள்விகளைக் கேட்டு, சரியான முடிவுக்கு வர ஒருவருக்கு உதவலாம்?

  • பாராட்டுங்கள். ஒரு வேத அறிஞர் “புத்திசாலித்தனமாக” பதில் சொன்னபோது இயேசு அவரைப் பாராட்டினார். (மாற் 12:34) உங்கள் கேள்விக்குப் பதில் சொல்பவரை நீங்கள் எப்படிப் பாராட்டலாம்?

இயேசு செய்த வேலையை நீங்களும் செய்யுங்கள்—சொல்லிக்கொடுங்கள் என்ற வீடியோவின் முதல் பாகத்தைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • சரியான தகவல் கற்றுக்கொடுக்கப்பட்டாலும், இந்த முறை சரியானதல்ல என்று எப்படிச் சொல்லலாம்?

  • வெறுமனே தகவலை விளக்குவது ஏன் போதாது?

வீடியோவின் இரண்டாவது பாகத்தைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • அந்தச் சகோதரர் கேள்விகளை எப்படித் திறமையாகப் பயன்படுத்தினார்?

  • வேறு என்ன விதங்களில் அவரைப் போலவே நாம் கற்பிக்கலாம்?

நாம் கற்பிக்கும் விதம் மற்றவர்களுடைய மனதை எந்தளவுக்குத் தொடுகிறது? (லூ 24:32)