பாவம் செய்யத் தூண்டாதீர்கள்—உங்களையும் சரி, மற்றவர்களையும் சரி!
பாவம் செய்ய நம்மை நாமே தூண்டுவதும் மற்றவர்களைத் தூண்டுவதும் எவ்வளவு பெரிய தவறு என்பதைப் புரிய வைப்பதற்காக இயேசு உவமைகளைப் பயன்படுத்தினார்.
-
சில செயல்களோ சூழ்நிலைகளோ ஒருவரை ‘பாவம் செய்யத் தூண்டலாம்.’ அதாவது, தவறான வழியில் போக வைக்கலாம், ஒழுக்கக்கேட்டில் ஈடுபட வைக்கலாம், அல்லது பாவக் குழியில் விழ வைக்கலாம்
-
ஒருவரை யாராவது ஒருவன் பாவம் செய்ய வைத்தால், மாவு அரைக்கும் பெரிய கல்லை அவனுடைய கழுத்தில் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவனுக்கு நல்லது
-
பாவம் செய்யத் தூண்டுகிற எதையும், அது அவர்களுடைய கை அல்லது கண் போன்ற முக்கியமான ஒன்றாக இருந்தாலும், அதை வெட்டி எறியும்படி இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார்
-
நாம் நேசிக்கிற ஒன்றை விட்டுக்கொடுக்காமல் கெஹென்னாவுக்குள் வீசப்படுவதைவிட, அதாவது நிரந்தரமாக அழிக்கப்படுவதைவிட, அதை விட்டுக்கொடுத்துவிட்டு கடவுளுடைய அரசாங்கத்தில் வாழ்வது நல்லது
எது என்னைப் பாவம் செய்யத் தூண்டலாம்? என்னையும், மற்றவர்களையும் நான் எப்படிப் பாவம் செய்யத் தூண்டாமல் இருக்கலாம்?