Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 12-13

கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமை

கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமை

கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமையை இயேசு ஏன் சொன்னார்? கோதுமை வகுப்பைச் சேர்ந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாரையும் மற்ற மனிதர்களிலிருந்து எப்போது, எப்படி பிரித்தெடுப்பார் என்பதைக் காட்டுவதற்காக அதைச் சொன்னார். விதைப்பது கி.பி. 33-ல் ஆரம்பித்தது.

13:24

‘ஒரு மனுஷன் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்தான்’

  • விதைப்பவர்: இயேசு கிறிஸ்து

  • நல்ல விதை விதைக்கப்படுவது: இயேசுவின் சீஷர்கள் கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்படுவது

  • நிலம்: உலகத்திலுள்ள மனிதர்கள்

13:25

‘ஆட்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவருடைய எதிரி வந்து களைகளை விதைத்தான்’

  • எதிரி: பிசாசு

  • ஆட்கள் தூங்கிக்கொண்டிருந்தது: அப்போஸ்தலர்களின் மரணம்

13:30

“அறுவடைவரை இரண்டும் சேர்ந்தே வளரட்டும்”

  • கோதுமை: பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள்

  • களைகள்: போலி கிறிஸ்தவர்கள்

‘முதலில் களைகளைப் பிடுங்குங்கள் . . . பின்பு கோதுமையை . . . சேர்த்து வையுங்கள்’

  • வேலைக்காரர்கள்/அறுவடை செய்கிறவர்கள்: தேவதூதர்கள்

  • களைகள் பிடுங்கப்படுவது: போலி கிறிஸ்தவர்கள் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களிலிருந்து பிரிக்கப்படுவது

  • களஞ்சியத்தில் சேர்த்து வைப்பது: பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் சுத்திகரிக்கப்பட்ட சபைக்குள் கூட்டிச் சேர்க்கப்படுவது

அறுவடைக் காலம் ஆரம்பமானபோது, போலி கிறிஸ்தவர்களிலிருந்து உண்மைக் கிறிஸ்தவர்களை எது வித்தியாசப்படுத்திக் காட்டியது?

இந்த உவமையைப் புரிந்துகொள்வதால் எனக்கு என்ன நன்மை?