Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

சகிப்புத்தன்மையுடன் ஆவலோடு காத்துக்கொண்டிருங்கள்

சகிப்புத்தன்மையுடன் ஆவலோடு காத்துக்கொண்டிருங்கள்

கடவுளுடைய அரசாங்கத்துக்காக நீங்கள் எவ்வளவு காலமாகக் காத்திருக்கிறீர்கள்? கஷ்டங்கள் மத்தியிலும் பொறுமையோடு சகித்திருக்கிறீர்களா? (ரோ 8:25) சில கிறிஸ்தவர்கள் மற்றவர்களால் வெறுக்கப்படுகிறார்கள், தவறாக நடத்தப்படுகிறார்கள், சிறையில் போடப்படுகிறார்கள், மரணத்தைச் சந்திக்க வேண்டிய நிலையைக்கூட எதிர்ப்படுகிறார்கள். வேறுசிலர், தீராத வியாதியாலும் முதுமையாலும் கஷ்டப்படுகிறார்கள்.

சோதனைகள் மத்தியிலும் சகிப்புத்தன்மையோடு காத்திருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? பைபிளைத் தினமும் படிப்பதன் மூலமும் தியானிப்பதன் மூலமும் நம் விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும். நம் நம்பிக்கையின்மீது கண்களைப் பதியவைக்க வேண்டும். (2கொ 4:16-18; எபி 12:2) ஜெபத்தில் யெகோவாவிடம் மன்றாட வேண்டும்; அவருடைய சக்தியால் கிடைக்கிற பலத்துக்காகக் கெஞ்சிக் கேட்க வேண்டும். (லூ 11:10, 13; எபி 5:7) ‘பொறுமையோடும் சந்தோஷத்தோடும் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதற்கு’ நம்முடைய அன்புள்ள அப்பாவால் நமக்கு உதவ முடியும்.—கொலோ 1:11.

“சகிப்புத்தன்மையோடு ஓடுவோமாக”—பரிசு நிச்சயம் என்பதை உறுதியாக நம்புங்கள் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • வாழ்க்கையில் என்ன “எதிர்பாராத சம்பவங்கள்” நடக்கலாம்? (பிர 9:11)

  • சோதனைகளைச் சந்திக்கும்போது ஜெபம் நமக்கு எப்படி உதவும்?

  • முன்பு போல் யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியவில்லை என்றால், இப்போது செய்ய முடிந்தவற்றைப் பற்றி ஏன் யோசித்துப்பார்க்க வேண்டும்?

  • பரிசை கண்முன் வையுங்கள்

    பரிசை நிச்சயம் பெற முடியும் என்ற நம்பிக்கையைக் காத்துக்கொள்வதற்கு உங்களுக்கு எது உதவும்?