கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
கடவுளுடைய பார்க்க முடியாத குணங்களை உங்களால் தெளிவாகப் பார்க்க முடிகிறதா?
வண்ண வண்ண பூக்கள்... நட்சத்திரங்கள் நிறைந்த வானம்... ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சி... இவற்றையெல்லாம் பார்க்கும்போது படைப்பாளரின் கைவண்ணத்தை உங்களால் பார்க்க முடிகிறதா? நம்மைச் சுற்றியிருக்கும் படைப்புகள் யெகோவாவின் பார்க்க முடியாத குணங்களைத் தெளிவாக எடுத்துக்கட்டுகின்றன. (ரோ 1:20) நம் கண்களால் பார்க்க முடிந்த விஷயங்களைப் பற்றி நிதானமாக யோசித்துப் பார்த்தால் கடவுளுடைய வல்லமை, அன்பு, ஞானம், நீதி போன்ற குணங்களையும் அவருடைய தாராள குணத்தையும் நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.—சங் 104:24.
யெகோவா படைத்தவற்றில் நீங்கள் எவற்றையெல்லாம் ஒவ்வொரு நாளும் பார்க்கிறீர்கள்? நகரத்தில் வாழ்ந்தால்கூட உங்களால் பறவைகளையோ மரங்களையோ பார்க்க முடியும். யெகோவாவின் படைப்புகளை உன்னிப்பாகக் கவனிப்பது, நம் வேதனையைக் குறைக்கவும், பிரச்சினைகளைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கவும் உதவுகிறது. அதோடு, யெகோவாவால் நம்மை என்றென்றும் கவனித்துக்கொள்ள முடியும் என்ற நம் விசுவாசத்தையும் அதிகமாக்குகிறது. (மத் 6:25-32) யெகோவாவின் ஈடிணையற்ற குணங்களைத் தெளிவாகப் பார்க்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். நம்மைச் சுற்றியிருக்கும் படைப்புகளை ரசிக்கும்போதும், அதற்காக நன்றியோடு இருக்கும்போதும், நம் படைப்பாளரிடம் நெருங்கிப் போவோம்.—சங் 8:3, 4.
கடவுளின் புகழ்பாடும் அற்புதப் படைப்புகள்—ஒளியும் நிறமும் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
வண்ணங்களைப் பார்க்க நிறமிகள் (pigments) எப்படி உதவுகின்றன?
-
சில வகையான படைப்புகள் பல வண்ணங்களில் பளிச்சிட எது உதவுகிறது?
-
வானத்தில் ஏன் நிறைய வண்ணங்கள் தெரிகின்றன?
-
கண்ணைக் கவரும் என்ன நிறங்களை உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் பார்த்திருக்கிறீர்கள்?
-
இயற்கையைக் கூர்ந்து கவனிக்க நாம் ஏன் நேரம் ஒதுக்க வேண்டும்?