Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள் | ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க. . .

கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துங்கள்

கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துங்கள்

கடவுளுடைய வார்த்தைக்கு வல்லமை இருக்கிறது! (எபி 4:12) கடவுளைப் பற்றித் தெரியாதவர்களின் இதயத்தைக்கூட அது தொடும். (1தெ 1:9; 2:13) பைபிளிலிருந்து நாம் காட்டுகிற ஒரு உண்மையை ஒருவர் புதிதாகக் கேள்விப்படும்போது அவர் ரொம்பவே ஆச்சரியப்படலாம். அதைப் பார்த்து நாமும் ரொம்ப சந்தோஷப்படுவோம்.

சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கும் வல்லமையை உணர்த்துவதில் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • வசனத்தைக் காட்டும்போது கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கும் வல்லமையை நீட்டா எப்படி உணர்த்தினாள்?

  • வசனத்தைச் சத்தமாக வாசிக்கச் சொல்லி, அதிலிருக்கும் முக்கியமான குறிப்பை எடுத்துச் சொல்வதன் மூலம் கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கும் வல்லமையை நீட்டா எப்படி உணர்த்தினாள்?

  • அந்த வசனம் ஜேடுடைய இதயத்தைத் தொட்டது என்று எப்படிச் சொல்லலாம்? அது நீட்டாவின் மனதுக்கு எப்படி இருந்தது?