Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

நண்பர்களை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்

நண்பர்களை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்

மோவாப் பாலைநிலத்தில் இஸ்ரவேலர்களுக்கு நடந்த சம்பவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். (1கொ 10:6, 8, 11) பாலியல் முறைகேட்டிலும் சிலை வழிபாட்டிலும் ஈடுபடுகிற மோவாப் தேசத்துப் பெண்களோடு இஸ்ரவேலர்கள் சகவாசம் வைத்துக்கொண்டதால் அவர்கள் படு மோசமான பாவக்குழிக்குள் விழுந்துவிட்டார்கள். அதனால், நிறைய பேர் அழிந்துபோனார்கள். (எண் 25:9) நம்மோடு வேலை செய்பவர்கள், பள்ளியில் கூடப்படிப்பவர்கள், அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்கள், உறவினர்கள், பழக்கமானவர்கள் என நம்மைச் சுற்றியிருப்பவர்கள் யெகோவாவை வணங்காதவர்களாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்களோடு நெருக்கமாகப் பழகுவதால் வரும் ஆபத்துகளைப் பற்றி இந்த பைபிள் உதாரணம் நமக்கு என்ன பாடம் கற்றுத்தருகிறது?

நம்மை எச்சரிக்கும் உதாரணங்கள்—சில பகுதிகள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • சிம்ரியும் மற்றவர்களும் யாமினிடம் பேசியதிலிருந்து அவர்களுக்குள் தவறான எண்ணம் இருந்ததை எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

  • சரியான விதத்தில் யோசிக்க யாமினுக்கு பினெகாஸ் எப்படி உதவினார்?

  • யெகோவாவை வணங்காத ஒருவருடன் நட்புடன் பழகுவதற்கும் அவருடைய நண்பராக இருப்பதற்கும் என்ன வித்தியாசம்?

  • சபையில்கூட நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

  • சோஷியல் மீடியாவில் சாட் குரூப்களில் இருக்கிற முன்பின் தெரியாதவர்களை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?