Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“நானே உன் சொத்து”

“நானே உன் சொத்து”

குருமார்களுக்கும் லேவியர்களுக்கும் மிக உயர்ந்த, மிக முக்கியமான ஒரு வேலையை யெகோவா கொடுத்தார் (எண் 18:6, 7)

லேவி கோத்திரத்தாருக்கு எந்த நிலமும் சொத்தாகக் கொடுக்கப்படவில்லை; அதற்குப் பதிலாக, யெகோவாவே அவர்களுக்கு சொத்தாக இருந்தார் (எண் 18:20, 24; w11 9/15 பக். 13 பாரா 9)

லேவியர்களையும் குருத்துவ சேவையையும் ஆதரிப்பதற்காக நிலத்தின் விளைச்சலில் பத்திலொரு பாகத்தை இஸ்ரவேலர்கள் கொடுத்தார்கள் (எண் 18:21, 26, 27; w11 9/15 பக். 7 பாரா 4)

தங்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதாக குருமார்களுக்கும் லேவியர்களுக்கும் யெகோவா வாக்குக் கொடுத்தார். அவருக்கு சேவை செய்வதற்காக நாம் தியாகங்களைச் செய்யும்போது, நம்முடைய தேவைகளை அவர் பார்த்துக்கொள்வார் என்பதில் உறுதியாக இருக்கலாம்.