Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள் | ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க. . .

கேள்விகளைக் கேளுங்கள்

கேள்விகளைக் கேளுங்கள்

ஊழியத்தை நாம் சந்தோஷமாகச் செய்ய வேண்டுமென்று ‘சந்தோஷமுள்ள கடவுளான’ யெகோவா விரும்புகிறார். (1தீ 1:11) நம்முடைய திறமைகளைப் பட்டைதீட்ட முயற்சி செய்யும்போது நம் சந்தோஷம் அதிகமாகும். கேள்விகளைக் கேட்பது ஆர்வத்தைத் தூண்டும். பேச்சை ஆரம்பிப்பதற்கான இயல்பான வழியாகவும் அது இருக்கிறது. மக்களிடம் கேள்விகளைக் கேட்கும்போது அவர்களால் யோசித்துப்பார்த்து சரியான முடிவுக்கு வர முடியும். (மத் 22:41-45) கேள்விகளைக் கேட்டு, அதற்கு அவர்கள் சொல்லும் பதில்களைக் கவனித்துக் கேட்கும்போது, ‘உங்கமேல எனக்கு ரொம்ப அக்கறை இருக்கு’ என்று சொல்வதுபோல் இருக்கும். (யாக் 1:19) அவர்கள் சொல்லும் பதிலை வைத்து, அவர்களிடம் எப்படித் தொடர்ந்து பேசலாம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்—கேள்விகளைக் கேட்பதில் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • ஜேட் என்ன நல்ல குணங்களைக் காட்டினாள்?

  • கேள்விகளைக் கேட்பதன் மூலம் தனிப்பட்ட அக்கறை இருப்பதை நீட்டா எப்படிக் காட்டினாள்?

  • நல்ல செய்திமீது ஆர்வத்தைத் தூண்டுவதற்காக ஜேடிடம் நீட்டா என்ன கேள்விகளைக் கேட்டாள்?

  • ஜேட் யோசித்துப்பார்த்து சரியான முடிவுக்கு வர நீட்டா என்ன கேள்விகளைக் கேட்டாள்?