Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கடவுளுக்கு உண்மையாக இல்லாதவர்களைப் பின்பற்றாதீர்கள்

கடவுளுக்கு உண்மையாக இல்லாதவர்களைப் பின்பற்றாதீர்கள்

கோராகுவும், தாத்தானும், அபிராமும் யெகோவாவின் ஏற்பாட்டை எதிர்ப்பதன் மூலம் அவருக்கு உண்மையில்லாமல் போய்விட்டார்கள். இவர்களையும் இவர்களை ஆதரித்த எல்லாரையும் யெகோவா அழித்தார். (எண் 16:26, 27, 31-33) என்னென்ன சூழ்நிலைகளில் நாம் யெகோவாவுக்கு உண்மையில்லாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது? கடவுளுக்கு உண்மையாக இல்லாதவர்களைப் பின்பற்றாமல் இருக்க என்ன பைபிள் உதாரணங்கள் நமக்கு உதவும்?

உண்மையாக இல்லாதவர்களை பின்பற்றாதீர்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • என்ன சூழ்நிலையை நாடியா சமாளிக்க வேண்டியிருந்தது? உண்மையாக இருக்க எந்த பைபிள் உதாரணம் அவளுக்கு உதவியது?

  • என்ன சூழ்நிலை ஒரு சகோதரருக்கு ஏமாற்றத்தைத் தந்தது? உண்மையாக இருக்க எந்த பைபிள் உதாரணம் அவருக்கு உதவியது?

  • என்ன சூழ்நிலை டெரன்ஸுக்கு ஒரு சோதனையாக இருந்தது? உண்மையாக இருக்க எந்த பைபிள் உதாரணம் அவருக்கு உதவியது?

  • பள்ளியில் ஒரு இளம் சகோதரர் என்ன சூழ்நிலையை எதிர்ப்பட்டார்? உண்மையாக இருக்க எந்த பைபிள் உதாரணம் அவருக்கு உதவியது?