பைபிளில் இருக்கும் புதையல்கள்
“இந்தப் போர் யெகோவாவின் போர்”
கற்றுக்கொண்ட விஷயங்களை வைத்தும் தனக்குக் கிடைத்த அனுபவத்தை வைத்தும் யெகோவாமேல் தாவீது நம்பிக்கை வைத்தார் (1சா 17:36, 37; wp16.4 பக். 11 பாரா. 2-3)
தனக்கு முன்னால் கோலியாத் எவ்வளவு பெரியவனாக இருக்கிறான் என்று பார்க்காமல், யெகோவாவுக்கு முன்னால் அவன் எவ்வளவு பொடியனாக இருக்கிறான் என்றுதான் தாவீது பார்த்தார் (1சா 17:45-47; wp16.4 பக். 11-12)
ராட்சதனான கோலியாத்தை வெட்டி வீழ்த்த தாவீதுக்கு யெகோவா உதவினார் (1சா 17:48-50; wp16.4 பக். 12 பாரா 5; அட்டைப் படம்)
சிலசமயங்களில், துன்புறுத்தலோ ஒரு கெட்ட பழக்கமோ நமக்கு மலைபோன்ற பிரச்சினையாகத் தெரியலாம். இதெல்லாம் நமக்கு மலைபோல் தெரிந்தாலும், யெகோவாவுடைய அபார சக்தியின் உதவியோடு நம்மால் சமாளிக்க முடியும்.—யோபு 42:1, 2.