கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
தினமும் பைபிளைப் படியுங்கள், ஞானத்தைக் கண்டுபிடியுங்கள்
கடவுள் தருகிற ஞானம் ஒரு புதையல் மாதிரி! (நீதி 2:1-6) தெளிவாக யோசிப்பதற்கும் நல்ல தீர்மானங்களை எடுப்பதற்கும் அந்த ஞானம் உதவும். அது நம்மை பாதுகாக்கும். அதனால்தான், “எல்லாவற்றையும்விட ஞானம்தான் முக்கியம்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி 4:5-7) கடவுளுடைய வார்த்தையில் மறைந்திருக்கும் இந்த புதையல்களை தோண்டி எடுக்க முயற்சி தேவைப்படுகிறது. அதற்காக நாம் “ராத்திரியும் பகலும்,” அதாவது ஒவ்வொரு நாளும், பைபிளை படிக்க வேண்டும். (யோசு 1:8) தவறாமல் பைபிளைப் படித்து அதிலிருந்து பயனடைய என்னவெல்லாம் செய்யலாம் என்று வீடியோவில் இருந்து தெரிந்துகொள்ளுங்கள்.
கடவுளுடைய வார்த்தையை நேசிக்கும் இளைஞர்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்:
தினமும் பைபிளைப் படிப்பது இந்த இளைஞர்களுக்கு ஏன் கஷ்டமாக இருந்தது? அவர்களுக்கு எது உதவியது?
-
மெலனி
-
சாம்வெல்
-
செலின்
-
ரஃபெல்லோ
பைபிளைப் படிக்க என்னுடைய அட்டவணை: