Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிய வீடியோக்கள்—எப்படிப் பயன்படுத்துவது?

பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிய வீடியோக்கள்—எப்படிப் பயன்படுத்துவது?

பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிச் சொல்லும் நான்கு வீடியோக்கள் நம்மிடம் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் எதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன?

  • பைபிளை ஏன் படிக்க வேண்டும்?—முழு நீள வீடியோ. மக்கள் எந்த மதப் பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு பைபிளின்மேல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக இந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கையில் வருகிற முக்கியமான கேள்விகளுக்கு பைபிளில் இருந்து பதில் தெரிந்துகொள்ள இந்த வீடியோ மக்களை உற்சாகப்படுத்தும். அந்த பதில்கள் எவ்வளவு நியாயமாக இருக்கின்றன என்றும் இதில் காட்டப்பட்டிருக்கிறது. பைபிள் படிப்பு வேண்டும் என்றால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் இந்த வீடியோ சொல்கிறது.

  • பைபிளை ஏன் படிக்க வேண்டும்? (சுருக்கமான வீடியோ). இந்த வீடியோ, முழு நீள வீடியோவைப் போலவேதான் இருக்கும். ஆனால் இதில், மூன்றில் ஒரு பகுதி மட்டுமே இருக்கும். பிஸியான பகுதிகளில் இந்த வீடியோ பிரயோஜனமாக இருக்கும்.

  • பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? நம்முடைய இலவச பைபிள் படிப்பு திட்டத்தின்மேல் ஆர்வத்தைத் தூண்டுவதுதான் இந்த வீடியோவின் நோக்கம். பைபிள் படிப்பு திட்டத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளுக்கு இதில் பதில் இருக்கிறது. அதோடு, பைபிள் படிப்பை ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும் என்றும் இது சொல்கிறது.

  • பைபிள் படிப்புக்கு அன்புடன் வரவேற்கிறோம்! பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்ட ஒருவரிடம் காட்டுவதற்காக இந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ, இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தின் 2-வது பக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைப் படிக்கும்போதே, தேவைப்பட்டால் இந்த வீடியோவைக் காட்டலாம். இந்த புத்தகத்தில் என்னென்ன தகவல்கள் இருக்கின்றன, இதைக் கலந்துபேசும்போது மாணவர் என்னவெல்லாம் கற்றுக்கொள்வார் என்பதையெல்லாம் இந்த வீடியோ சொல்லும்.

இந்த ஒவ்வொரு வீடியோவும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக தயாரிக்கப்பட்டிருந்தாலும், பொருத்தமான சமயங்களில் இவற்றில் எதை வேண்டுமானாலும் காட்டலாம் அல்லது அனுப்பலாம். பிரஸ்தாபிகள் எல்லாரும் இந்த வீடியோக்களைப் பற்றி நன்றாக தெரிந்துகொண்டு, இவற்றை ஊழியத்தில் பயன்படுத்த வேண்டுமென்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.