மார்ச் 20-26
2 நாளாகமம் 1–4
பாட்டு 41; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“சாலொமோன் ராஜா முட்டாள்தனமான முடிவை எடுக்கிறார்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
2நா 1:11, 12—நாம் செய்யும் ஜெபங்கள் எப்படி இருக்க வேண்டுமென்று இந்தப் பதிவு காட்டுகிறது? (w05 12/1 பக். 19 பாரா 6)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2நா 4:7-22 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
நினைவுநாள் அழைப்பிதழ்: (3 நிமி.) ஏற்கெனவே ஆர்வம் காட்டிய சொந்தக்காரரையோ கூடப் படிக்கிறவரையோ கூட வேலை செய்கிறவரையோ நினைவுநாள் நிகழ்ச்சிக்காக அழையுங்கள். (th படிப்பு 2)
மறுசந்திப்பு: (4 நிமி.) பலமுறை சந்தித்த ஒரு நபரிடம் பேசுவதுபோல் நடிப்பு இருக்க வேண்டும். முந்தின சந்திப்பில் நினைவுநாள் அழைப்பிதழைப் பெற்றுக்கொண்ட ஒருவரிடம் இலவச பைபிள் படிப்பு திட்டத்தைப் பற்றி விளக்கிவிட்டு, இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுங்கள். பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்), அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (th படிப்பு 17)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 09 குறிப்பு 5 (th படிப்பு 9)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
வருடத்தின் முக்கியமான நாளுக்கு நீங்கள் தயாரா?: (15 நிமி.) பேச்சு மற்றும் வீடியோ. ஊழியக் கண்காணி நடத்துவார். உங்கள் சபை பகுதியில் நினைவுநாள் அழைப்பிதழைக் கொடுக்கும் வேலை எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பதை சொல்லுங்கள். நல்ல அனுபவம் கிடைத்தவர்களை பேட்டி எடுங்கள். பக்கங்கள் 8 மற்றும் 9-ல் இருக்கிற நினைவுநாள் பைபிள் வாசிப்பு அட்டவணையைப் பார்க்கும்படி பிரஸ்தாபிகளிடம் சொல்லுங்கள்; அதைப் பயன்படுத்தி நினைவுநாளுக்காக இதயத்தை தயார்படுத்த சொல்லுங்கள். (எஸ்றா 7:10) நிகழ்ச்சியின்போது புதிதாக வருபவர்களை நாம் எப்படி அன்பாக வரவேற்கலாம் என்பதைப் பற்றியும் கலந்துபேசுங்கள். (ரோ 15:7; mwb16.03 பக். 2) நினைவுநாள் ரொட்டி செய்வது எப்படி என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 41 குறிப்புகள் 1-4
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 135; ஜெபம்