Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

‘என் இதயம் எப்போதும் இங்கேதான் இருக்கும்’

‘என் இதயம் எப்போதும் இங்கேதான் இருக்கும்’

ஆலயத்தை யெகோவா தனக்காக தேர்ந்தெடுத்தார் (2நா 7:11, 12)

ஆலயம் யெகோவாவின் பெயரைத் தாங்கியிருந்ததால் அங்கே நடக்கிற விஷயங்களை அவர் ரொம்ப ஆர்வமாக கவனிப்பார். அதனால்தான், தன் இதயம் எப்போதும் அங்கே இருக்கும் என்று சொன்னார் (2நா 7:16; w02 11/15 பக். 5 பாரா 1)

யெகோவாவை “முழு இதயத்தோடு” வணங்குவதை மக்கள் நிறுத்திவிட்டால், அந்த ஆலயம் அழிக்கப்படுவதற்கு அவர் விட்டுவிடுவார் (2நா 6:14; 7:19-21; it-2-E பக். 1077-1078)

ஆலயம் அர்ப்பணிக்கப்பட்ட சமயத்தில், மக்கள் எல்லாரும் தங்களுடைய இதயமும் எப்போதும் ஆலயத்தில்தான் இருக்கும் என்று நினைத்தார்கள். அதாவது, தாங்கள் யெகோவாவை எப்போதும் முழு இதயத்தோடு வணங்குவார்கள் என்று நினைத்தார்கள். ஆனால், போகப்போக அவர்களுடைய ஆர்வம் குறைந்துவிட்டது.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவை முழு இதயத்தோடு வணங்குகிறேன் என்பதை நான் எப்படிக் காட்டுகிறேன்?’