Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பேரழிவுக்கு பின் உதவி

பேரழிவுக்கு பின் உதவி

நாம் வாழும் இந்த காலத்தில் இயற்கை பேரழிவுகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. பொதுவாக, ஒரு பேரழிவுக்குப் பிறகு நிவாரண உதவிகளை உடனடியாக செய்ய வேண்டியிருக்கும். அதை ரொம்ப ஒழுங்காகவும் திறம்பட்ட விதத்திலும் செய்வது அவசியம். அதனால்தான், ஆளும் குழு ஒவ்வொரு கிளை அலுவலகத்திலும் பேரழிவு நிவாரண இலாகாவை ஏற்பாடு செய்திருக்கிறது.

இந்த இலாகாவில் இருக்கிற சகோதரர்கள் பேரழிவைப் பற்றி கேள்விப்பட்ட உடனே, அங்கே இருக்கிற மூப்பர்களை தொடர்புகொள்வார்கள். பிரஸ்தாபிகளுக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா என்று கேட்பார்கள். அவர்களாகவே சமாளிக்க முடியாத அளவுக்கு பெரிய சேதம் ஏற்பட்டிருந்தால், நிவாரண வேலையை மேற்பார்வை செய்ய கிளை அலுவலகம் சில சகோதரர்களை நியமிக்கும். அந்த சகோதரர்கள், தேவைப்பட்டால் வாலண்டியர்களுக்கு ஏற்பாடு செய்வார்கள். குறிப்பிட்ட பொருள்கள் ஏதாவது தேவைப்பட்டால், அதை மற்ற சகோதர சகோதரிகள் நன்கொடையாக கொடுக்க முடியுமா என்றும் கேட்பார்கள். அதுமட்டுமல்ல, வேறு ஏதாவது பொருள்களை வாங்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொடுக்க வேண்டியிருந்தால், அதற்கான ஏற்பாடுகளையும் செய்வார்கள்.

நிவாரண வேலையை இப்படி செய்யும்போது நிறைய நன்மைகள் இருக்கின்றன. ஆனால், சகோதரர்கள் தங்களுடைய சொந்த முயற்சியில் இந்த வேலைகளைச் செய்தால் நிறைய குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நிவாரண வேலைக்காக கிடைத்த பணமும் பொருளும் வீணாகக்கூட வாய்ப்பிருக்கிறது. தேவையில்லாமல் ஒரே வேலையை மறுபடியும் மறுபடியும் செய்வதுபோல் ஆகிவிடலாம்.

எவ்வளவு பணம் தேவைப்படும்... எவ்வளவு வாலண்டியர்கள் தேவைப்படுவார்கள்... என்பதையெல்லாம் அமைப்பால் நியமிக்கப்பட்ட சகோதரர்கள் முடிவு செய்வார்கள். அதோடு, நிவாரண வேலைகள் வேகமாக நடப்பதற்கு உள்ளூர் அதிகாரிகளின் உதவி தேவைப்பட்டால் அவர்களை தொடர்புகொள்வார்கள். அதனால், ஒருவர் தனிப்பட்ட விதமாக மற்ற சகோதர சகோதரிகளிடமிருந்து நிவாரணத் தொகையையோ பொருள்களையோ வசூலிக்கக் கூடாது; பாதிக்கப்பட்ட பகுதிகளை போய் பார்க்கவும் கூடாது. உங்களிடம் கேட்கப்பட்டால் மட்டும் அப்படி செய்யுங்கள்.

இருந்தாலும், ஒரு பேரழிவு ஏற்படும்போது சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம். (எபி 13:16) ஏனென்றால், அவர்களை நமக்கு ரொம்ப பிடிக்கும். அப்படியென்றால், அவர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்? பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர்களுக்கு உதவி செய்கிறவர்களுக்காகவும் நாம் ஜெபம் செய்யலாம். இது ரொம்ப முக்கியம்! அதோடு, உலகளாவிய வேலைக்காக நன்கொடை கொடுக்கலாம். ஆளும் குழுவின் வழிநடத்துதலின்படி இந்த நன்கொடைகளை எப்படி சிறந்த விதத்தில் பயன்படுத்தலாம் என்பதை ஒவ்வொரு கிளை அலுவலகமும் முடிவு செய்யும். ஒருவேளை, நிவாரண வேலையில் நாம் தனிப்பட்ட விதத்தில் உதவி செய்ய ஆசைப்பட்டால், உள்ளூர் வடிவமைப்பு/கட்டுமான வாலண்டியர்களுக்கான விண்ணப்பத்தை (DC-50) பூர்த்தி செய்யலாம்.

பிரேசிலை நாசப்படுத்திய வெள்ளம் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்:

2020-ல் பிரேசிலில் வெள்ளம் ஏற்பட்ட பிறகு, யெகோவாவின் சாட்சிகள் செய்த நிவாரண வேலையில் உங்கள் மனதைத் தொட்டது எது?