ஏப்ரல் 1-7
சங்கீதம் 23-25
பாட்டு 4; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. ‘யெகோவா என் மேய்ப்பர்’
(10 நிமி.)
யெகோவா நம்மை வழிநடத்துகிறார் (சங் 23:1-3; w05 11/1 பக். 17 பாரா. 9, 10)
யெகோவா நம்மைப் பாதுகாக்கிறார் (சங் 23:4; w05 11/1 பக். 18, 19 பாரா. 13-15)
யெகோவா நமக்கு உணவளிக்கிறார் (சங் 23:5; w05 11/1 பக். 20 பாரா. 17, 18)
அன்பான ஒரு மேய்ப்பர் தன் ஆடுகளைக் கண்ணும்கருத்துமாகக் கவனித்துக்கொள்வதுபோல் யெகோவாவும் தன் மக்களைப் பார்த்துக்கொள்கிறார்.
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எப்படியெல்லாம் யெகோவா என்னைக் கவனித்துக்கொண்டார்?’
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
-
சங் 23:3—“நீதியின் பாதை” என்றால் என்ன, அந்தப் பாதையைவிட்டு விலகாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? (w11 2/15 பக். 24 பாரா. 1-3)
-
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) சங் 23:1–24:10 (th படிப்பு 5)
4. பேச்சை ஆரம்பிப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. சுற்றுச்சூழலைப் பற்றிக் கவலைப்படும் ஒருவரை உற்சாகப்படுத்த பைபிளிலிருந்து ஒரு வசனத்தைக் காட்டுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 5)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டில் சந்திப்பது. இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டை வாங்கிக்கொண்ட ஒருவருக்கு பைபிள் படிப்பு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 3)
6. சீஷர்களை உருவாக்குவது
(5 நிமி.) lff பாடம் 14 குறிப்பு 4 (lmd பாடம் 11 குறிப்பு 3)
பாட்டு 54
7. அன்னியர்களுடைய குரலை நாம் ஒதுக்கித்தள்ளுகிறோம்
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
மேய்ப்பர்களுடைய குரல் ஆடுகளுக்கு நன்றாகத் தெரியும். மேய்ப்பர்கள் கூப்பிட்டால்தான் அவை போகும். முன்பின் தெரியாதவர்கள் கூப்பிட்டால் அவர்களைவிட்டு அவை ஓடிவிடும். (யோவா 10:5) அதேமாதிரிதான் நாமும் நம்முடைய அன்பான, நம்பகமான மேய்ப்பர்கள் யெகோவாவுடைய குரலையும் இயேசுவுடைய குரலையும் கேட்டு நடக்கிறோம். (சங் 23:1; யோவா 10:11) ‘போலியான போதனைகளை’ பயன்படுத்தி நம் விசுவாசத்தை குறைக்கப் பார்க்கும் அன்னியர்களுடைய குரலை நாம் ஒதுக்கித்தள்ளுகிறோம்.—2பே 2:1, 3.
முதல் தடவையாக ஒரு அன்னியனுடைய குரல் இந்தப் பூமியில் கேட்டதைப் பற்றி ஆதியாகமம் 3-வது அதிகாரம் சொல்கிறது. சாத்தான், தான் யார் என்பதை மறைத்து ஏவாளிடம் ஒரு ஃபிரெண்டுபோல் பேசினான். யெகோவாவுடைய வார்த்தையைப் பற்றியும் உள்நோக்கத்தைப் பற்றியும் ஏவாளுடைய மனதில் சந்தேகத்தை விதைத்துவிட்டான். வருத்தமான விஷயம் என்னவென்றால், ஏவாள் அவனுடைய பேச்சைக் கேட்டு ஏமாந்துவிட்டாள். அதனால் அவளும் கஷ்டத்தை அனுபவித்தாள். அவளுடைய குடும்பத்தில் இருக்கும் எல்லாரும் கஷ்டத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
யெகோவாவைப் பற்றியும் அவருடைய அமைப்பைப் பற்றியும் சாத்தான் சந்தேக விதைகளை நம் மனதில் விதைக்கப் பார்க்கிறான். அதற்காக அவன் தப்பான விஷயங்களைப் பரப்புகிறான். பாதி உண்மை, பாதி பொய்யைச் சொல்கிறான் அல்லது மொத்தமாகவே பொய் சொல்கிறான். இந்த மாதிரியான ஏமாற்றுக்காரர்களுடைய குரலை நாம் கேட்கும்போது அங்கிருந்து ஓடிவிட வேண்டும். ‘என்னதான் சொல்கிறார்கள் என்று கேட்கலாமே’ என்று நாம் யோசித்தால்கூட அது ஆபத்துதான். ஏவாளை ஏமாற்ற சாத்தான் ரொம்பவெல்லாம் பேசவில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்! (ஆதி 3:1, 4, 5) நமக்குத் தெரிந்தவர்கள் அல்லது நமக்குப் பிடித்தவர்கள் நமக்கு நல்லது செய்வதற்காக அமைப்பைப் பற்றி தப்பு தப்பாகச் சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது என்ன செய்வீர்கள்?
‘அன்னியர்களுடைய குரலை’ ஒதுக்கித்தள்ளுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பின்பு இப்படிக் கேளுங்கள்:
யெகோவாவை வணங்காத அம்மாவிடம் ஜேட் நடந்துகொண்ட விதத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 8 பாரா. 1-4, பக். 61-62-ன் பெட்டிகள்