Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 29–மே 5

சங்கீதம் 34-35

ஏப்ரல் 29–மே 5

பாட்டு 10; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. ‘எல்லா சமயத்திலும் யெகோவாவைப் புகழுங்கள்’

(10 நிமி.)

கஷ்டங்கள் வந்தபோதும் தாவீது யெகோவாவைப் புகழ்ந்தார் (சங் 34:1; w07 3/1 பக். 22 பாரா 11)

தாவீது தன்னைப் பற்றிப் பெருமை பேசாமல் யெகோவாவைப் பற்றிப் பெருமை பேசினார் (சங் 34:2-4; w07 3/1 பக். 22 பாரா 13)

தாவீதுடைய வார்த்தைகள் அவரோடு இருந்தவர்களைப் பலப்படுத்தியது (சங் 34:5; w07 3/1 பக். 23 பாரா 15)

அபிமெலேக்கிடமிருந்து தப்பித்த பிறகு தாவீது வனாந்தரத்துக்குப் போனார். சவுலுடைய ஆட்சியில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த 400 ஆண்கள் தாவீதோடு வனாந்தரத்தில் சேர்ந்துகொண்டார்கள். (1சா 22:1, 2) ஒருவேளை அந்த ஆண்களை மனதில் வைத்து தாவீது இந்த சங்கீதத்தை எழுதியிருக்கலாம்.—சங் 34, மேல்குறிப்பு.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘அடுத்த சபைக் கூட்டத்தில் மற்றவர்களுடன் பேசும்போது நான் எப்படி யெகோவாவைப் புகழலாம்?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 35:19—சத்துருக்கள் தன்னைப் பார்த்து கண் சிமிட்டாமல் இருக்கும்படி கடவுளிடம் தாவீது மன்றாடியதன் அர்த்தம் என்ன? (w06 5/15 பக். 20 பாரா 1)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(2 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. நீங்கள் ஒருவரிடம் சாட்சிக் கொடுக்க ஆரம்பிப்பதற்குள் உரையாடல் முடிந்துவிடுகிறது. (lmd பாடம் 1 குறிப்பு 4)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. (lmd பாடம் 2 குறிப்பு 4)

6. நம்பிக்கைகளை விளக்குவது

(5 நிமி.) நடிப்பு. ijwfq 59—பொருள்: ஒரு பண்டிகையை கொண்டாடலாமா வேண்டாமா என்று யெகோவாவின் சாட்சிகள் எப்படி முடிவு செய்கிறார்கள்? (th படிப்பு 17)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 59

7. கூட்டங்களில் யெகோவாவைப் புகழ மூன்று வழிகள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

யெகோவாவைப் புகழ சபைக் கூட்டங்களில் நமக்கு அருமையான வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதில் மூன்று வழிகளைப் பார்க்கலாம்.

பேசும்போது: யெகோவா செய்த நல்ல விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேசுங்கள். (சங் 145:1, 7) நீங்கள் படித்த அல்லது கேட்ட விஷயம் உங்களுக்குப் பிரயோஜனமாக இருந்ததா? உங்களுக்கு ஊழியத்தில் நல்ல அனுபவங்கள் கிடைத்ததா? உங்களை உற்சாகப்படுத்துகிற மாதிரி யாராவது எதையாவது சொன்னார்களா அல்லது செய்தார்களா? படைப்பில் நீங்கள் பார்த்த எந்த விஷயம் உங்களுக்குப் பிடித்திருந்தது? இவையெல்லாமே யெகோவா நமக்குக் கொடுத்த பரிசுகள். (யாக் 1:17) கூட்டங்களுக்கு நாம் சீக்கிரமாகப் போனால் இவற்றைப் பற்றி எல்லாரோடும் பேச நமக்கு நேரம் கிடைக்கும்.

பதில் சொல்லும்போது: ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு பதிலாவது சொல்ல முயற்சி செய்யுங்கள். (சங் 26:12) நேரடியான பதில்கள், கூடுதலான குறிப்புகள், படவிளக்கங்கள், வசனங்களின் அடிப்படையில் பதில்கள் ஆகியவற்றை நீங்கள் சொல்லலாம். படித்த விஷயங்களை வாழ்க்கையில் எப்படிப் பொருத்தலாம் என்றும் சொல்லலாம். பதில் சொல்ல நீங்கள் கைதூக்கும்போது மற்றவர்களும் கைதூக்கலாம். அதனால் நிறைய பதில்களைத் தயாரியுங்கள். உங்களுடைய பதில்கள் 30 வினாடி அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், நிறையப் பேரால் கடவுளுக்குப் ‘புகழ்ச்சிப் பலிகளை’ கொடுக்க முடியும்.—எபி 13:15.

பாட்டு பாடும்போது: கூட்டங்களில் உற்சாகமாகப் பாட்டுப் பாடுங்கள். (சங் 147:1) பெரிய சபைகளில் உங்களுக்கு ஒருவேளை பதில் சொல்வதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். ஆனால், பாட்டுப் பாடுவதற்கு உங்களுக்கு எப்போதுமே வாய்ப்பு கிடைக்கும். ‘எனக்கு நன்றாகப் பாட வராது’ என்று நீங்கள் ஒருவேளை நினைத்தாலும் உங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்யும்போது யெகோவா அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவார். (2கொ 8:12) கூட்டங்களில் பாடுவதற்கு நீங்கள் வீட்டிலேயே பழகி பார்க்கலாம்.

நம் சரித்திரம் சொல்லித்தரும் பாடம்—இசை எனும் பரிசு, பகுதி 1 என்ற வீடியோவைக் காட்டுங்கள். பின்பு இப்படிக் கேளுங்கள்:

நம்முடைய அமைப்பின் ஆரம்பக் கால சரித்திரத்தில், யெகோவாவைப் புகழ பாடல்களைப் பாடுவது முக்கியமாக இருந்தது என்று எப்படிச் சொல்லலாம்?

8. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | 2024 மாநாட்டுக்கான புதிய பாடல்; ஜெபம்