ஏப்ரல் 8-14
சங்கீதம் 26-28
பாட்டு 34; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க தாவீது என்ன செய்தார்?
(10 நிமி.)
யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடக்க உதவி செய்யும்படி தாவீது யெகோவாவிடம் கேட்டார் (சங் 26:1, 2; w04 12/1 பக். 14 பாரா. 8-9)
கெட்டவர்களோடு தாவீது பழகவில்லை (சங் 26:4, 5; w04 12/1 பக். 15 பாரா. 12-13)
யெகோவாவை வணங்குவது தாவீதுக்கு ரொம்ப பிடித்திருந்தது (சங் 26:8; w04 12/1 பக். 16 பாரா. 17-18)
தப்பு செய்திருந்தாலும் தாவீது “உத்தம இதயத்தோடு” நடந்துகொண்டார். (1ரா 9:4) யெகோவாமீது அவர் காட்டிய அன்பிலிருந்தும் முழு மனதோடு அவர் செய்த சேவையிலிருந்தும் அது தெரிகிறது.
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
-
சங் 27:10—நமக்குப் பிடித்தவர்கள் நம்மைக் கைவிட்ட மாதிரி இருந்தாலும் இந்த வசனம் என்ன ஆறுதலைத் தருகிறது? (w06 7/15 பக். 28 பாரா 15)
-
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) சங் 27:1-14 (th படிப்பு 2)
4. பேச்சை ஆரம்பிப்பது
(2 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் ஒரு துண்டுப்பிரதியைப் பயன்படுத்துங்கள். (th படிப்பு 3)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டில் சந்திப்பது. போனமுறை நீங்கள் கொடுத்துவிட்டு வந்த துண்டுப்பிரதியின் கடைசி பக்கத்தில் இருக்கும் கேள்வியைக் கலந்துபேசுங்கள். jw.org-ஐப் பற்றிச் சொல்லுங்கள். அதில் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைச் சுருக்கமாகக் காட்டுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 3)
6. பேச்சு
(5 நிமி.) lmd இணைப்பு A குறிப்பு 3—பொருள்: பூமி அழகான பூஞ்சோலையாகும். (th படிப்பு 13)
பாட்டு 128
7. ஒழுக்க விஷயத்தில் உண்மையாக இருக்கும் டீனேஜ் பிள்ளைகள்
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
யெகோவாவை வணங்கும் இளம் பிள்ளைகள் ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருக்க கடினமாக முயற்சி செய்கிறார்கள். தங்களுடைய பாவ இயல்பை எதிர்க்கவும், இளமை மலரும் பருவத்தில் ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருக்கவும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தப் பருவத்தில்தான் சரியான தீர்மானத்தை எடுக்க முடியாதபடி செக்ஸ் ஆசைகள் அவர்களுக்கு அதிகமாக இருக்கும். (ரோ 7:21; 1கொ 7:36) திருமணம் ஆவதற்கு முன்பு செக்ஸ் வைக்க சொல்லியோ ஓரினச்சேர்க்கையில் ஈடுபட சொல்லியோ மற்றவர்கள் கட்டாயப்படுத்தும்போது அதையும் அவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. (எபே 2:2) தொடர்ந்து உண்மையாக இருக்க உழைக்கும் நம் அருமை பிள்ளைகளை நினைத்து நாம் ரொம்ப பெருமைப்படுகிறோம்.
டீனேஜில் நான்—கல்யாணத்துக்கு முன் செக்ஸ் வைக்க சொல்லி கட்டாயப்படுத்தினால் என்ன செய்வது? என்ற வீடியோவைக் காட்டுங்கள். பின்பு இதைக் கேளுங்கள்:
-
கோரி மற்றும் காம்ரென்னுக்குக் கூடப்படிக்கிறவர்களிடமிருந்து என்ன பிரச்சினை வந்தது?
-
தொடர்ந்து உண்மையாக இருக்க எது அவர்களுக்கு உதவியது?
-
இதே மாதிரி சூழ்நிலைகளைச் சமாளிக்க எந்த பைபிள் நியமங்கள் உங்களுக்கு உதவும்?
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 8 பாரா. 5-12