Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 4-10

சங்கீதம் 16-17

மார்ச் 4-10

பாட்டு 111; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. ‘யெகோவாவே நல்லதையெல்லாம் எனக்குத் தருகிறீர்கள்’

(10 நிமி.)

யெகோவாவை வணங்குகிறவர்களோடு நட்பு வைத்துக்கொள்ளும்போது நமக்குச் சந்தோஷம் கிடைக்கும் (சங் 16:2, 3; w18.12 பக். 26 பாரா 11)

யெகோவாவோடு நெருங்கிய நண்பர்களாக இருக்கும்போது நமக்குத் திருப்தி கிடைக்கும் (சங் 16:5, 6; w14 2/15 பக். 29 பாரா 5)

யெகோவா நமக்கு ஆன்மீக விதத்தில் உதவி செய்வதால் நமக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது (சங் 16:8, 9; w08 2/15 பக். 3 பாரா. 2-3)

நல்ல விஷயங்களின் பிறப்பிடமே யெகோவாதான். அவரை வணங்குவதற்கு நம் வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தால் தாவீதை மாதிரியே நாமும் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வோம்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவின் சாட்சியாக ஆன பிறகு என் வாழ்க்கை எப்படி நல்லபடியாக மாறியிருக்கிறது?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 17:8—“கண்மணிபோல்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? (it-2-E பக். 714)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(1 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். நினைவுநாள் அழைப்பிதழைக் கொடுங்கள். (th படிப்பு 11)

5. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். நினைவுநாள் அழைப்பிதழைக் கொடுங்கள். அந்த நபர் ஆர்வம் காட்டிய பிறகு, இயேசுவின் மரணத்தை நினைத்துப் பாருங்கள் என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (th படிப்பு 9)

6. பேச்சை ஆரம்பிப்பது

(2 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. நினைவுநாள் அழைப்பிதழைக் கொடுங்கள். (th படிப்பு 2)

7. சீஷர்களை உருவாக்குவது

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 20

8. நினைவுநாளுக்கு நாம் எப்படியெல்லாம் தயாராகலாம்?

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

இயேசு சொன்ன மாதிரியே அவருடைய மரண நினைவுநாளை நாம் நினைத்து பார்க்கிறோம். அது இந்த வருஷம், மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. சரித்திரத்திலேயே இதுவரை யாருமே காட்டாத அளவுக்கு அன்பை இரண்டு பேர் நம்மீது காட்டியிருக்கிறார்கள். இதைப் பற்றியும் அந்த நிகழ்ச்சியில் நாம் பார்ப்போம். (லூ 22:19; யோவா 3:16; 15:13) அந்த விசேஷ நிகழ்ச்சிக்கு நாம் எப்படித் தயாராகலாம்?

  • அந்த சமயத்தில் நடக்கும் விசேஷ ஊழியத்தில் முடிந்தளவு கலந்துகொள்ளுங்கள். விசேஷப் பேச்சு மற்றும் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மக்களை அழையுங்கள். யாரையெல்லாம் அழைக்க வேண்டும் என்று ஒரு பட்டியல் போடுங்கள். அவர்களை மறக்காமல் அழையுங்கள். உங்கள் ஊழியப் பகுதிக்கு வெளியே யாராவது கலந்துகொள்ள ஆசைப்பட்டால், நிகழ்ச்சி நடக்கிற நேரத்தையும், இடத்தையும் jw.org-ல் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

  • மார்ச், ஏப்ரல் மாதங்களில் இன்னும் அதிகமாக ஊழியம் செய்ய முயற்சி செய்யுங்கள். துணை பயனியராக 15 அல்லது 30 மணிநேரம் ஊழியம் செய்ய குறிக்கோள் வைக்க முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள்.

  • பூமியில் இயேசு வாழ்ந்த கடைசி வாரத்தில் நடந்த முக்கியமான விஷயங்களைப் பற்றி மார்ச் 18-லிருந்து படிக்க ஆரம்பியுங்கள். பக்கங்கள் 6-7-ல் “2024 நினைவுநாள் பைபிள் வாசிப்பு அட்டவணை” கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் எவ்வளவு வாசிக்கலாம் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்.

  • நினைவுநாள் அன்று விசேஷ காலை வழிபாடு நிகழ்ச்சியை jw.org-ல் பாருங்கள்.

  • நினைவுநாளுக்கு புதிதாக வருபவர்களையும், செயலற்ற பிரஸ்தாபிகளையும் அன்பாக வரவேற்க தயாராக இருங்கள். நிகழ்ச்சி முடிந்தபின் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் தயாராக இருங்கள். ஆர்வம் காட்டுகிறவர்களை மறுபடியும் போய் பார்க்க ஏற்பாடு செய்யுங்கள்.

  • நினைவுநாளுக்கு முன்பும், அதற்கு பிறகும் மீட்புவிலையைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.

இயேசுவின் மரணத்தை நினைத்துப் பாருங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்வியைக் கேளுங்கள்:

நினைவுநாள் சமயத்தில் செய்கிற விசேஷ ஊழியத்தில் இந்த வீடியோவை எப்படிப் பயன்படுத்தலாம்?

9. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 73; ஜெபம்