பிரச்சினைகள் வந்தாலும் யோபு யெகோவாவுக்கு உத்தமமாக இருந்தார்
இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த காலத்தில் யோபு ஊத்ஸ் என்ற தேசத்தில் வாழ்ந்தார். அவர் ஒரு இஸ்ரவேலராக இல்லாவிட்டாலும் யெகோவாவை உண்மையாக வணங்கினார். யோபுவுக்கு பெரிய குடும்பமும், நிறைய சொத்துபத்தும் இருந்தது. அவர் அதிக செல்வாக்குள்ள நபராகவும், ஒரு மூப்பராகவும், பாரபட்சம் காட்டாத நீதிபதியாகவும் இருந்தார். ஏழைகளுக்கும், உதவி கேட்டு வந்தவர்களுக்கும் தாராளமாக உதவினார். எல்லா சூழ்நிலைமையிலும் யோபு உத்தமராக நடந்துகொண்டார்.
யோபு தன்னுடைய வாழ்க்கையில் யெகோவாதான் மிக முக்கியமானவர் என்று காட்டினார்
-
யோபு, யெகோவாவுக்கு உத்தமமாக இருந்ததை சாத்தான் கவனித்தான். ஆதாயத்திற்காகத்தான் யோபு யெகோவாவுக்கு கீழ்ப்படிந்தார் என்று சாத்தான் சொன்னான்
-
யோபு சுயநலத்திற்காகத்தான் யெகோவாவை வணங்கினார் என்று சாத்தான் குற்றம் சாட்டினான்
-
சாத்தானின் குற்றச்சாட்டிற்கு பதில் கொடுப்பதற்கு, யோபுவை சோதிக்க யெகோவா அனுமதித்தார். அதனால், சாத்தான் யோபுவை நிறைய வழிகளில் சோதித்தான்
-
யோபு மட்டுமல்ல மனிதர்கள் எல்லாரும் யெகோவாவை உண்மையாக வணங்கவில்லை என்று சாத்தான் சொன்னான்
-
எத்தனை சோதனைகள் வந்தாலும், யோபு யெகோவாவுக்கு விரோதமாக எதுவும் பேசவும் இல்லை, செய்யவும் இல்லை