யோபு வேதனையில் பேசுகிறார்
யோபு சொத்துபத்துகளை இழந்தார், பிள்ளைகளை பறிகொடுத்தார், மோசமான வியாதியால் கஷ்டப்பட்டார். ஆனாலும், யெகோவாவை விட்டு அவர் விலகவில்லை. அதனால், யெகோவாமீது யோபுவுக்கு இருந்த நம்பிக்கையை இழக்க செய்ய சாத்தான் இன்னொரு வழியை பயன்படுத்தினான். யோபுவை ஆறுதல்படுத்த மூன்று ‘போலி நண்பர்கள்’ வந்தார்கள். அவர்மீது அக்கறை இருப்பதுபோல் நடித்தார்கள். பிறகு, ஒரு வார்த்தைகூட ஆறுதலாக பேசாமல் ஏழு நாட்கள் யோபுவோடு உட்கார்ந்திருந்தார்கள். யோபுவை குற்றப்படுத்தியும் மனதை காயப்படுத்தியும் பேசினார்கள்.
யோபு வேதனையில் மூழ்கியிருந்தாலும் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்
-
தாங்க முடியாத வேதனையில் தவித்ததால், கடவுளைப் பற்றி யோபு தவறாக நினைத்தார். அவர் கடவுளுக்கு உண்மையாக இருக்கிறாரா இல்லையா என்றெல்லாம் கடவுள் பார்ப்பதில்லை என்று நினைத்தார்
-
தான் படும் கஷ்டங்களுக்கு எல்லாம் உண்மையிலேயே யார் காரணம் என்று யோபு யோசித்துப் பார்க்கவில்லை
-
யோபு வேதனையில் மூழ்கியிருந்தாலும் அவருக்கு யெகோவாமீது எந்தளவுக்கு அன்பு இருந்தது என்பதைப் பற்றி நண்பர்களிடம் பேசினார்