Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 28–ஏப்ரல் 3

கோடிக்கணக்கான மக்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள்—ஒருவரின் உயிர் தியாகத்தால்

கோடிக்கணக்கான மக்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள்—ஒருவரின் உயிர் தியாகத்தால்

நினைவு நாளின்போது இயேசுவின் தியாக மரணத்தைப் பற்றியும், அதனால் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றியும் யோசித்துப் பார்ப்போம். அந்த ஆசீர்வாதங்களில் ஒன்றுதான், இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு பார்க்கும் வாய்ப்பு. என்றென்றும் வாழ வேண்டும் என்றுதான் யெகோவா நம்மை படைத்தார். அதனால்தான், நமக்கு பிடித்தவர்கள் யாராவது சாகும்போது அந்த வலியை நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. (1கொ 15:26) லாசரு இறந்தபோது சீடர்கள் அழுததைப் பார்த்து இயேசு ரொம்ப வேதனைப்பட்டார். (யோவா 11:33-35) இயேசு செய்த ஒவ்வொரு செயலில் இருந்தும் நாம் யெகோவாவைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்ள முடியும். அதனால், நமக்கு பிடித்தவர்கள் சாகும்போது நாம் வேதனைப்படுவதைப் பார்த்து யெகோவாவும் கண்டிப்பாக வேதனைப்படுவார் என்று நாம் நம்பலாம். (யோவா 14:7) இறந்துபோன தன்னுடைய ஊழியர்களை மறுபடியும் உயிரோடு எழுப்பும் நாளுக்காக யெகோவா ஆசை ஆசையாக காத்திருக்கிறார். அவர்களைப் பார்க்க நாமும் ஆசையாக காத்திருக்கிறோம்.—யோபு 14:14, 15.

யெகோவா எதை செய்தாலும் ஒழுங்காக செய்பவர் என்று பைபிள் சொல்கிறது. அதனால், இறந்தவர்களை உயிரோடு எழுப்பும்போது அதை ஒழுங்காக செய்வார், அதில் எந்த குழப்பமும் இருக்காது. (1கொ 14:33, 40) அப்போது, சவ அடக்கத்திற்கு பதிலாக உயிரோடு வருபவர்களை வரவேற்பதற்கான நிகழ்ச்சிகள் இருக்கலாம். இறந்தவர்களை நினைத்து வேதனைப்படும்போது யெகோவா கொடுத்திருக்கும் இந்த அருமையான நம்பிக்கையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். (2கொ 4:17, 18) யெகோவா தன்னுடைய ஒரே மகனை நமக்காக இறக்கும்படி செய்திருக்கிறார். அதோடு, இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்ற விஷயத்தை பைபிளில் பதிவு செய்திருக்கிறார். அதற்கெல்லாம், நாம் அவருக்கு எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும்!—கொலோ 3:15.

  • உங்களுடைய நண்பர்களில், உறவினர்களில் முக்கியமாக யாரை எல்லாம் மறுபடியும் பார்க்க ஆசைப்படுகிறீர்கள்?

  • பைபிளில் சொல்லியிருக்கும் நபர்களில் முக்கியமாக யாரை எல்லாம் பார்த்துப் பேச ஆசைப்படுகிறீர்கள்?