மார்ச் 7-13
எஸ்தர் 6-10
பாட்டு 131; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“எஸ்தர் சுயநலம் இல்லாமல் நடந்துகொண்டாள்”: (10 நிமி.)
எஸ்த 8:3, 4—எஸ்தர் பாதுகாப்பாக இருந்தாலும் மற்றவர்களுக்காக தன்னுடைய உயிரை பணயம் வைத்தாள் (ia 143 ¶24-25)
எஸ்த 8:5—அகாஸ்வேருவிடம் எஸ்தர் சாதுரியமாக அதாவது, பக்குவமாக பேசினாள் (w06 3/1 11 ¶8)
எஸ்த 8:17—நிறைய பேர் யூத மதத்துக்கு மாறினார்கள் (w06 3/1 11 ¶3)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
எஸ்த 8:1, 2—“மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான்” என்று பென்யமீனைப் பற்றி யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? (ia 142 பெட்டி)
எஸ்த 9:10, 15, 16—எதிரிகளின் பொருள்களை எடுத்துக்கொள்வதற்கு சட்டம் அனுமதித்தபோதும், யூதர்கள் ஏன் அப்படி செய்யவில்லை? (w06 3/1 11 ¶4)
எஸ்த 6 முதல் 10 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
ஊழியத்தில் பயன்படுத்த இந்த அதிகாரங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?
பைபிள் வாசிப்பு: எஸ்த 8:1-9 (4 நிமிடத்திற்குள்)
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இந்த மாதம் ஊழியத்தில் எப்படி பேசலாம்?: (15 நிமி.) துண்டுப்பிரதியையும் நினைவு நாள் அழைப்பிதழையும் ஊழியத்தில் எப்படிப் பேசிக் கொடுக்கலாம் என்பதற்கான 3 வீடியோக்களை காட்டுங்கள். அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை கலந்து பேசுங்கள். பிறகு, “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... எப்படிப் பேசலாம் என்று நீங்களே தயாரியுங்கள்” என்ற பகுதியில் இருக்கும் குறிப்புகளையும் கலந்து பேசுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 118
“எல்லாரையும் வரவேற்க நீங்கள் தயாரா?”: (15 நிமி.) கலந்து பேசுங்கள். நினைவு நாளுக்கு வரும் எல்லாரையும் நாம் வரவேற்க வேண்டும். அப்படி வரவேற்க முயற்சி எடுத்ததால் கிடைத்த நல்ல அனுபவங்களை சொல்லச் சொல்லுங்கள். அதில் ஒரு சிறந்த அனுபவத்தை நடித்துக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: பைபிள் கதை 104 (30 நிமி.)
முடிவு குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 147 (27); ஜெபம்