Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

எல்லாரையும் வரவேற்க நீங்கள் தயாரா?

எல்லாரையும் வரவேற்க நீங்கள் தயாரா?

மார்ச் 23-ம் தேதி 1 கோடிக்கும் அதிகமான நபர்கள் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். யெகோவா, மனிதர்களுக்காக தன்னுடைய மகனையே மீட்பு விலையாக கொடுத்திருக்கிறார். எதிர்காலத்திலும் நிறைய ஆசீர்வாதங்களை தரப்போகிறார். அதைப் பற்றி எல்லாம் அன்று கொடுக்கப்படும் பேச்சில், பேச்சாளர் விளக்கி சொல்வார். (ஏசா 11:6-9; 35:5, 6; 65:21-23; யோவா 3:16) அந்த நாளில், பேச்சாளருக்கு மட்டுமல்ல, நமக்கும்கூட ஒரு முக்கியமான பொறுப்பு இருக்கிறது. அங்கு வருபவர்கள் எல்லாரையும் வரவேற்கும் பொறுப்பு இருக்கிறது. (ரோ 15:7) அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  • நிகழ்ச்சி ஆரம்பிக்கும்வரை உங்களுடைய இடத்தில் உட்கார்ந்திருப்பதற்கு பதிலாக, புதியவர்களையும் செயலற்றவர்களையும் சிரித்த முகத்தோடு அன்பாக வரவேற்க முயற்சி எடுங்கள்

  • நீங்கள் அழைத்தவர்களிடம் மட்டுமே பேசாமல், வந்திருக்கும் எல்லா புதியவர்களிடமும் பேசுவதற்கு முயற்சி எடுங்கள். அவர்களுடைய பக்கத்தில் உட்கார்ந்து பாட்டு புத்தகத்தையும் பைபிளையும் காட்டுங்கள்

  • நினைவு நாளுக்கு முதல் முறையாக வருபவர்களுக்கு சில கேள்விகள் இருக்கலாம். நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். ஒருவேளை, இன்னொரு சபை அதே இடத்தை நினைவு நாளுக்காக பயன்படுத்தினால், நீங்கள் சீக்கிரமாக கிளம்ப வேண்டி இருக்கலாம். அப்போது அவர்களை, இரண்டு மூன்று நாட்களில் மறுபடியும் போய் பாருங்கள். அவர்களுடைய விலாசம் அல்லது ஃபோன் நம்பர் உங்களிடம் இல்லை என்றால் அதை வாங்கிக்கொள்ளுங்கள்.