எஸ்தர் சுயநலம் இல்லாமல் நடந்துகொண்டாள்
தன்னுடைய உயிரை பெரிதாக நினைக்காமல் யெகோவாவுக்காகவும் அவருடைய மக்களுக்காகவும் எஸ்தர் துணிந்து செயல்பட்டாள்
-
எஸ்தரும் மொர்தெகாயும் பாதுகாப்பாக இருந்தார்கள். ஆனால், யூதர்களுடைய உயிர் ஆபத்தில் இருந்தது. அவர்களை கொல்ல வேண்டும் என்ற ஆமானுடைய கட்டளை சாம்ராஜ்யத்தின் மூலைமுடுக்கெல்லாம் எட்டியது
-
எஸ்தர் தன்னுடைய உயிரை பணயம் வைத்து ராஜா அழைக்காமல் மறுபடியும் அவருக்கு முன்பாக போகிறாள். யூதர்களை கொல்ல வேண்டும் என்ற கட்டளையை ரத்து செய்யும்படி ராஜாவிடம் அழுது கெஞ்சினாள்
-
பெர்சிய சட்டத்தின்படி ராஜாவின் பேரில் போடப்பட்ட கட்டளையை ராஜா நினைத்தால்கூட ரத்து செய்ய முடியாது. அதனால், ஒரு புது கட்டளையை போடும்படி எஸ்தருக்கும் மொர்தெகாய்க்கும் ராஜா அதிகாரம் கொடுக்கிறார்
யெகோவா அவருடைய மக்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்
-
யூதர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள போர் செய்யலாம் என்ற இரண்டாவது கட்டளை போடப்பட்டது
-
இந்த இரண்டாவது கட்டளை சாம்ராஜ்யத்தில் இருக்கும் எல்லா இடங்களுக்கும் உடனடியாக அனுப்பப்பட்டது. யூதர்கள் போருக்கு தயாரானார்கள்
-
யூதர்களோடு கடவுள் இருக்கிறார் என்பதை நிறையப் பேர் புரிந்துகொண்டதால் யூத மதத்துக்கு மாறினார்கள்