Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார் என்ற சிற்றேட்டை எப்படி பயன்படுத்தலாம்?

இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார் என்ற சிற்றேட்டை எப்படி பயன்படுத்தலாம்?

பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு முன்பு, அல்லது முடித்த பின்பு, இந்த சிற்றேட்டில் இருந்து படியுங்கள். அதற்காகத்தான் இந்த சிற்றேடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. * பாடம் 1-4, யெகோவாவின் சாட்சிகள் யார் என்பதைப் பற்றி விளக்குகிறது. பாடம் 5-14, அவர்கள் செய்யும் வேலைகளைப் பற்றி சொல்கிறது. பாடம் 15-28, அவர்களுடைய அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பதை விளக்குகிறது. எல்லா பாடங்களையும், வரிசையாக நடத்தினால் ரொம்ப பிரயோஜனமாக இருக்கும். ஒருவேளை பைபிள் படிப்பவர் ஏதாவது ஒரு பாடத்தை முதலில் படிக்க விரும்பினால் அதை சொல்லிக்கொடுங்கள். ஒவ்வொரு பாடமும் ஒரு பக்கத்திற்குதான் இருக்கும். அதனால், 5 அல்லது 10 நிமிடத்திற்குள் அதை நடத்திவிடலாம்.

  • முதலில் தலைப்பைக் காட்டுங்கள். அது கேள்வி வடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது

  • ஒவ்வொரு பாராவாக அல்லது முழு பாடத்தையும் படியுங்கள்

  • படித்த விஷயங்களை கலந்து பேசுங்கள். ஒவ்வொரு பக்கத்தில் இருக்கும் படங்களையும் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளையும் பயன்படுத்துங்கள். முக்கியமான பைபிள் வசனங்களை வாசித்து குறிப்புகளைச் சொல்லுங்கள். தலைப்பில் இருக்கும் கேள்விக்கு உபதலைப்புகள் எப்படி பதில் கொடுக்கிறது என்று காட்டுங்கள்

  • “இன்னும் தெரிந்துகொள்ள...” பகுதி இருந்தால் அதையும் சேர்ந்து வாசியுங்கள். அதிலிருக்கும் விஷயங்களை செய்யும்படி பைபிள் படிப்பவரை உற்சாகப்படுத்துங்கள்

^ பாரா. 3 அப்டேட் செய்யப்பட்ட சிற்றேடு ஆன்லைனில் கிடைக்கிறது.