Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கடவுள் சொல்வதைக் கேளுங்கள் என்ற சிற்றேட்டை எப்படி பயன்படுத்தலாம்?

கடவுள் சொல்வதைக் கேளுங்கள் என்ற சிற்றேட்டை எப்படி பயன்படுத்தலாம்?

வாசிக்க கஷ்டப்படுகிறவர்களுக்காக இந்த சிற்றேடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. பைபிளின் அடிப்படை உண்மைகளை சுலபமாக புரிந்துகொள்ள உதவும் நிறைய படங்கள் இதில் இருக்கின்றன. ஒவ்வொரு பாடமும் இரண்டு பக்கங்களுக்கு இருக்கும். அதிலிருக்கும் படங்களை அடுத்தடுத்து விளக்குவதற்கு, படங்களுக்கு இடையே அம்புக்குறிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டில் இருக்கும் அதே படங்கள்தான் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டிலும் இருக்கின்றன. ஆனால், கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டில் கூடுதலான விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. படிக்க தெரிந்த நபர்களுக்கு அதை பயன்படுத்தலாம். படிக்க தெரியாதவர்களுக்கு கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டை கொடுத்தாலும், பிரஸ்தாபிகள் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டை கையில் வைத்து அவர்களுக்கு படிப்பு நடத்துகிறார்கள். சில பக்கங்களில் கூடுதலான விளக்கங்கள் ஒரு பெட்டியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மாணாக்கரால் புரிந்துகொள்ள முடியும் என்றால் அதையும் பயன்படுத்துங்கள்.

இந்த இரண்டு சிற்றேட்டையும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஊழியத்தில் கொடுக்கலாம். அவை அந்த மாதத்திற்கான பிரசுர அளிப்பாக இல்லாவிட்டாலும் கொடுக்கலாம். பைபிள் பதிவுகளை விளக்க இந்த சிற்றேட்டில் இருக்கும் படங்களை பயன்படுத்துங்கள். மாணாக்கர் நன்றாக புரிந்துகொண்டாரா என்பதை தெரிந்துகொள்ள கேள்விகளை கேளுங்கள். ஒவ்வொரு பக்கத்தின் கடைசியில் இருக்கும் வசனத்தை வாசித்து விளக்குங்கள். இந்த சிற்றேட்டை படித்து முடித்த பிறகு, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? அல்லது, பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது? என்ற புத்தகத்திலிருந்து படிப்பு நடத்துங்கள். இது ஞானஸ்நானம் எடுக்க அந்த நபருக்கு உதவியாக இருக்கும்.