Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 12–16

இஸ்ரவேலர்கள் யெகோவாவை மறந்துவிட்டார்கள்

இஸ்ரவேலர்கள் யெகோவாவை மறந்துவிட்டார்கள்

யூதா மற்றும் எருசலேம் மக்கள் பெருமை பிடித்தவர்களாக இருந்தார்கள். யெகோவாவின் பேச்சை கேட்கவே கூடாது என்று பிடிவாதமாக இருந்தார்கள். அதனால், அவர்களை அழிக்க வேண்டும் என்று யெகோவா தீர்மானமாக இருந்தார். தன் தீர்மானத்தை மக்களுக்கு புரியவைப்பதற்கு யெகோவா எரேமியாவுக்கு ஒரு கஷ்டமான நியமிப்பைக் கொடுத்தார்.

ஒரு நாரிழை இடுப்புவாரை எரேமியா வாங்கினார்

13:1, 2

  • இடுப்பில் கட்டப்பட்டிருந்த இடுப்புவார், அந்த மக்கள் யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதை அடையாளப்படுத்தியது

எரேமியா, அந்த இடுப்புவாரை யூப்ரடிஸ் ஆற்றுக்கு கொண்டுபோனார்

13:3-5

  • ஒரு பாறை இடுக்கில் அதை மறைத்து வைத்துவிட்டு அவர் எருசலேமுக்கு திரும்பி வந்தார்

மறைத்து வைத்திருந்த இடுப்புவாரை கொண்டுவர எரேமியா யூப்ரடிஸ் ஆற்றுக்கு திரும்பவும் போனார்

13:6, 7

  • அது மிகவும் நாசமாகியிருந்தது

எரேமியா அந்த நியமிப்பை செய்து முடித்த பிறகுதான், அதை செய்ய சொன்னதற்கான காரணத்தை யெகோவா விளக்கினார்

13:8-11

  • பார்க்க அற்பமாக தோன்றும் விஷயத்தை செய்யும்படி எரேமியாவிடம் யெகோவா சொன்னார். எரேமியா அதை அப்படியே செய்தார். மக்களின் மனதை தொட யெகோவா எடுத்த முயற்சியை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது