Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யெகோவாவை மறக்காமல் இருக்க உங்கள் குடும்பத்துக்கு உதவுங்கள்

யெகோவாவை மறக்காமல் இருக்க உங்கள் குடும்பத்துக்கு உதவுங்கள்

யூதர்கள் தன்னை மறந்துவிட்டதால், ஒரு பெரிய அழிவை சந்திக்கப்போகிறார்கள் என்று எரேமியா மூலமாக யெகோவா சொன்னார். (எரே 13:25) அவர்களுக்கு ஏன் இந்த நிலைமை வந்தது? அங்கிருந்த குடும்பங்கள் யெகோவாவை மறந்துவிட்டார்கள்; அவரோடு இருந்த பந்தத்தை இழந்துவிட்டார்கள். உபாகமம் 6:5-7-ல் யெகோவா கொடுத்திருந்த கட்டளைக்கு குடும்ப தலைவர்கள் கீழ்ப்படியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

நமக்கு என்ன பாடம்? குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் யெகோவாவை மறந்துவிடாமல் இருக்க குடும்ப தலைவர்கள் உதவ வேண்டும். எல்லாருக்கும் பிரயோஜனமான விதத்தில் குடும்ப வழிபாட்டை தவறாமல் நடத்த வேண்டும். (சங் 22:27) இன்று யெகோவாவோடு நல்ல பந்தத்தை காத்துக்கொள்ளும் குடும்பங்கள் சபைக்கு தூண்போல் இருக்கிறார்கள். இந்த வார்த்தைகளை உங்கள் இதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்”—குடும்பங்களின் பேட்டி என்ற வீடியோவை பார்த்தபின் இங்கிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்:

  • குடும்ப வழிபாட்டை நடத்துவது சிலருக்கு சவாலாக இருந்தாலும் அதை எப்படி வெற்றிகரமாக நடத்துகிறார்கள்?

  • குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமான விதத்தில் தவறாமல் குடும்ப வழிபாட்டை நடத்துவதால் என்ன நன்மை?

  • தவறாமல் குடும்ப வழிபாட்டை நடத்துவது அல்லது அதில் கலந்துகொள்வது எனக்கு கஷ்டமாக இருக்கிறதா? அதை சரிசெய்ய நான் என்ன செய்யலாம்?