Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட—தயாரிப்பதற்கு மாணாக்கருக்கு சொல்லிக்கொடுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட—தயாரிப்பதற்கு மாணாக்கருக்கு சொல்லிக்கொடுங்கள்

ஏன் முக்கியம்: மாணாக்கர்கள் பைபிள் படிப்புக்குத் தயாரிக்கும்போது, அவர்களால் சுலபமாகப் புரிந்துகொள்ளவும், நாம் சொல்லிக்கொடுப்பதை ஞாபகம் வைக்கவும் முடியும். எந்தளவுக்கு நன்றாகப் புரிந்துகொண்டு, ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறார்களோ, அந்தளவுக்கு அவர்கள் சீக்கிரத்தில் முன்னேறுவார்கள். ஞானஸ்நானம் எடுத்தபிறகும் கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் அவர்கள் தயாரிக்க வேண்டும். அப்போதுதான், அவர்களால் ‘விழிப்புடன் இருக்க’ முடியும். (மத் 25:13) எப்படிப் படிப்பது என்று தெரிந்து வைத்திருப்பதும், ஒழுங்கான ஒரு படிப்புத் திட்டத்தை வைத்திருப்பதும், வாழ்க்கை முழுவதும் அவர்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும். பைபிள் படிப்புக்காகத் தயாரிப்பதற்கு நாம் ஆரம்பத்திலிருந்தே மாணாக்கர்களுக்கு உதவ வேண்டும்.

எப்படிச் செய்வது:

  • நல்ல முன்மாதிரி வையுங்கள். (ரோ 2:21) மாணாக்கரை மனதில் வைத்து ஒவ்வொரு தடவையும் தயாரியுங்கள். (km 11/15 பக். 3) உங்கள் புத்தகத்தில் நீங்கள் குறித்து வைத்திருப்பதை அவர் பார்க்கட்டும்

  • தயாரிப்பதற்கு அவரை உற்சாகப்படுத்துங்கள். அவர்கள் ஆர்வமாகப் படிக்கிறார்கள் என்று தெரிந்தவுடன், தயாரிப்பது பைபிள் படிப்பின் ஒரு அம்சம் என்று சொல்லுங்கள்; தயாரிப்பதால் கிடைக்கும் நன்மைகளையும் சொல்லுங்கள். வேலைகள் மத்தியிலும் தயாரிக்க எப்படி நேரம் ஒதுக்கலாம் என்பதற்கு நடைமுறையான ஆலோசனைகளைச் சொல்லுங்கள். குறித்து வைப்பதால் கிடைக்கும் நன்மைகளை மாணாக்கர் புரிந்துகொள்ள, சிலர் தங்கள் புத்தகத்தை மாணாக்கருக்குக் கொடுக்கிறார்கள். மாணாக்கர் தயாரித்து வைத்திருக்கும்போது, மனதாரப் பாராட்டுங்கள்

  • எப்படித் தயாரிப்பது என்று காட்டுங்கள். பைபிள் படிப்பை ஆரம்பித்த புதிதில், எப்படித் தயாரிப்பது என்று மாணாக்கருக்குச் சொல்லிக்கொடுக்க, பைபிள் படிப்பு நேரம் முழுவதையுமே சிலர் செலவிடுகிறார்கள்