Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 25

“விழிப்புடன் இருங்கள்”

“விழிப்புடன் இருங்கள்”

25:1-12

பத்து கன்னிப்பெண்களைப் பற்றிய உவமையை பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு இயேசு சொல்லியிருந்தாலும், அதிலிருக்கிற குறிப்பு எல்லா கிறிஸ்தவர்களுக்கும் பொருந்துகிறது. (w15 3/15 பக். 12-16) “அதனால், விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால், உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது” என்று இயேசு சொன்னார். (மத் 25:13) இயேசுவின் உவமையை உங்களால் விளக்க முடியுமா?

  • மணமகன் (வசனம் 1)—இயேசு

  • புத்தியுள்ள, தயாராக இருந்த கன்னிப்பெண்கள் (வசனம் 2)—தங்கள் நியமிப்பை உண்மையோடு செய்யத் தயாராக இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள். அவர்கள் முடிவுவரை ஒளிவீசிக்கொண்டு இருப்பார்கள் (பிலி 2:15)

  • “இதோ, மணமகன் வருகிறார்!” என்ற சத்தம் (வசனம் 6)—இயேசுவின் பிரசன்னத்திற்கான அத்தாட்சி

  • புத்தியில்லாத கன்னிப்பெண்கள் (வசனம் 8)—மணமகனை வரவேற்கப்போன, ஆனால் விழிப்போடும் உத்தமத்தன்மையோடும் இல்லாத பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள்

  • எண்ணெயைத் தர மறுத்த புத்தியுள்ள கன்னிப்பெண்கள் (வசனம் 9)—கடைசி முத்திரையைப் பெற்றுக்கொண்ட உண்மையுள்ள பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களால், உண்மையில்லாமல் போன பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு உதவ முடியாது; ஏனென்றால், அப்போது காலம் கடந்திருக்கும்

  • “மணமகன் வந்துவிட்டார்” (வசனம் 10)—இயேசு, மிகுந்த உபத்திரவத்தின் முடிவில் நியாயந்தீர்க்க வருகிறார்

  • புத்தியுள்ள கன்னிப்பெண்கள் மணமகனோடு திருமண விருந்தில் கலந்துகொள்ள வீட்டுக்குள் போவதும், கதவு மூடப்படுவதும் (வசனம் 10)—இயேசு, உண்மையுள்ள பரலோக நம்பிக்கையுள்ளவர்களை பரலோகத்துக்குக் கூட்டிச் சேர்க்கிறார்; உண்மையில்லாமல் போனவர்களோ, தங்களுடைய பரலோக வெகுமதியை இழக்கிறார்கள்