Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...​—⁠கடிதங்கள் எழுதுவது

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...​—⁠கடிதங்கள் எழுதுவது

ஏன் முக்கியம்: சக கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்துவதற்காக பவுல் எழுதிய 14 கடிதங்களில் 1 கொரிந்தியர் புத்தகமும் ஒன்று. பொதுவாக ஒரு கடிதத்தை எழுதும்போது, வார்த்தைகளை நன்றாகத் தேர்ந்தெடுக்க முடிகிறது. அதைப் பெற்றுக்கொள்பவரும் திரும்பத் திரும்ப வாசித்துப்பார்க்க முடிகிறது. கடிதம் எழுதுவது, சொந்தக்காரர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் சாட்சி கொடுப்பதற்கான ஒரு நல்ல வழி. அதோடு, நேரில் பார்க்க முடியாதவர்களுக்குச் சாட்சி கொடுப்பதற்கும் இது ஓர் அருமையான வழி. உதாரணத்துக்கு, ஆர்வம் காட்டிய ஒருவரை மறுபடியும் வீட்டில் சந்திப்பது கஷ்டமாக இருக்கலாம். அல்லது, நம் பகுதியில் இருக்கும் சிலர் பலத்த பாதுகாப்பான அடுக்குமாடி கட்டிடங்களிலோ (high-security apartment buildings) பெரிய பெரிய குடியிருப்புகளிலோ (gated communities) ஒதுக்குப்புறமான இடங்களிலோ (isolated places) வாழலாம். அவர்களைச் சந்திப்பதும் கஷ்டமாக இருக்கலாம். முன்பின் தெரியாத ஒருவருக்குக் கடிதம் எழுதும்போது நாம் எவற்றை மனதில் வைக்க வேண்டும்?

எப்படிச் செய்வது:

  • நேரில் அந்த நபரைப் பார்த்தால் என்ன சொல்வீர்களோ, அதையே கடிதத்திலும் எழுதுங்கள். ஆரம்பத்திலேயே உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள். பிறகு, கடிதம் எழுதுவதற்கான காரணத்தைத் தெளிவாகச் சொல்லுங்கள். அதோடு, யோசிக்க வைக்கும் ஒரு கேள்வியைக் கேளுங்கள். நம் வெப்சைட்டை பார்க்கும்படி சொல்லுங்கள். அதிலிருக்கிற ஆன்லைன் பைபிள் படிப்புப் பாடங்களை (ஆங்கிலம்) பற்றிச் சொல்லுங்கள். வீட்டு பைபிள் படிப்பு திட்டத்தைப் பற்றி விளக்குங்கள் அல்லது பைபிள் படிப்புக்காகப் பயன்படுத்தப்படும் பிரசுரங்களில் இருக்கும் சில தலைப்புகளைக் குறிப்பிடுங்கள். ஆன்லைன் பைபிள் படிப்புப் பாடங்களில் (ஆங்கிலம்) இருக்கும் தலைப்புகளைக் குறிப்பிடுங்கள். கான்டாக்ட் கார்டையோ, அழைப்பிதழையோ, ஏதாவது ஒரு துண்டுப்பிரதியையோ அந்தக் கடிதத்தோடு சேர்த்து அனுப்பலாம்

  • சுருக்கமாக எழுதுங்கள். இல்லையென்றால், வாசித்து முடிப்பதற்குள் அந்த நபருக்கு அலுப்புத்தட்டிவிடும்.—மாதிரி கடிதத்தைப் பாருங்கள்

  • எழுத்துப் பிழை இருக்கிறதா... கையெழுத்து நேர்த்தியாகவும் படிப்பதற்கு சுலபமாகவும் இருக்கிறதா... என்றெல்லாம் பாருங்கள். நட்பு ரீதியிலும், சாதுரியமாகவும், நம்பிக்கை தரும் விதத்திலும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். சரியான தபால் தலை ஒட்டுங்கள்