Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பைபிள் படிப்பு படிப்பவர்களுக்கு வீடியோக்களைப் பயன்படுத்தி சொல்லிக்கொடுங்கள்

பைபிள் படிப்பு படிப்பவர்களுக்கு வீடியோக்களைப் பயன்படுத்தி சொல்லிக்கொடுங்கள்

கண்களால் பார்க்கக்கூடிய விஷயங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. கற்றுக்கொண்ட விஷயத்தைப் புரிந்துகொள்ளவும், ஞாபகத்தில் வைக்கவும் அவை உதவுகின்றன. முக்கியமான பாடங்களைச் சொல்லித்தர, மகத்தான போதகரான யெகோவாவும் அவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார். (ஆதி 15:5; எரே 18:1-6) பெரிய போதகரான இயேசுவும் அவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார். (மத் 18:2-6; 22:19-21) கண்களால் பார்க்கக்கூடிய விஷயங்களில் ஒன்றுதான், வீடியோக்கள்! சமீப காலங்களில் அவற்றை நாம் அதிகமாகப் பயன்படுத்துகிறோம்; இவை ரொம்பவே பிரயோஜனமாக இருக்கின்றன. பைபிள் படிப்பு நடத்தும்போது வீடியோக்களை நன்றாகப் பயன்படுத்துகிறீர்களா?

கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி! சிற்றேட்டில் இருக்கும் பாடங்களைச் சொல்லித்தருவதற்கு 10 வீடியோக்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சிற்றேட்டில் இருக்கிற தடித்த எழுத்துகளில் கொடுக்கப்பட்டிருக்கும் சில கேள்விகள்தான், இந்த வீடியோக்களின் தலைப்புகளாக இருக்கின்றன. இந்தச் சிற்றேட்டை வெப்சைட்டிலேயே படிக்கும்போது, அதாவது டிஜிட்டல் வர்ஷனைப் படிக்கும்போது, இந்த வீடியோக்களுக்கான லிங்க்கைப் பார்க்க முடியும். எந்தச் சமயத்தில் அந்த வீடியோவைக் காட்ட வேண்டும் என்பதை அது நமக்கு ஞாபகப்படுத்துகிறது. கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கிற பைபிள் படிப்புப் பிரசுரங்களைப் பயன்படுத்தி, படிப்பு நடத்தும்போதும் நாம் வீடியோக்களைக் காட்டலாம்.

உங்கள் பைபிள் மாணாக்கருக்குப் புரிந்துகொள்ள கஷ்டமாக இருக்கும் ஒரு பைபிள் விஷயத்தைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்களா? அல்லது, ஏதோ ஒரு சோதனையோடு அவர் போராடிக்கொண்டிருக்கிறாரா? அப்படியென்றால், அவருக்குப் பிரயோஜனமான வீடியோக்கள் jw.org வெப்சைட்டிலோ JW பிராட்காஸ்டிங்கிலோ இருக்கின்றனவா என்று தேடிப் பாருங்கள். முடிந்தால், நீங்களும் அவரோடு சேர்ந்து வீடியோக்களைப் பார்க்கலாம். பிறகு, அதைப் பற்றிக் கலந்துபேசலாம்.

ஒவ்வொரு மாதமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றை நீங்கள் பார்க்கும்போது, மற்றவர்களுக்குச் சொல்லித்தர அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசித்துப்பாருங்கள்.