கிறிஸ்தவ அன்பைக் காட்டுவது என்றால் என்ன?
யாராவது நம்மிடம் அன்பில்லாமல் நடந்துகொள்ளும்போது, பழிக்குப் பழி வாங்காமல் இருந்தால் மட்டும் போதாது. அவர்களுக்குத் தயவோடு ஏதாவது செய்வதும் முக்கியம். அப்போதுதான், நாம் கிறிஸ்தவ அன்பைக் காட்டுகிறோம் என்று சொல்ல முடியும். “உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிட கொடுங்கள். அவன் தாகமாக இருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள். இப்படிச் செய்யும்போது நெருப்புத் தணலை அவன் தலைமேல் குவிப்பீர்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ரோ 12:20) நம்மைத் தவறாக நடத்திய ஒருவருக்குத் தயவு காட்டும்போது, தான் நடந்துகொண்டதை நினைத்து அவர் வருத்தப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் ஒருவருடைய மனதைத் தெரியாமல் காயப்படுத்தியிருந்தும், அவர் தயவோடு நடந்துகொண்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது?