மார்ச் 2-8
ஆதியாகமம் 22-23
பாட்டு 120; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“ஆபிரகாமின் விசுவாசத்தை கடவுள் சோதித்துப் பார்த்தார்”: (10 நிமி.)
ஆதி 22:1, 2—ஆபிரகாம் உயிருக்கு உயிராக நேசித்த அவருடைய மகன் ஈசாக்கை பலி செலுத்தும்படி கடவுள் அவரிடம் சொன்னார் (w12 7/1 பக். 20 பாரா. 4-6)
ஆதி 22:9-12—ஈசாக்கைக் கொலை செய்யாதபடி ஆபிரகாமை யெகோவா தடுத்தார்
ஆதி 22:15-18—ஆபிரகாம் கீழ்ப்படிந்ததால், அவரை ஆசீர்வதிக்கப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்தார் (w12 10/15 பக். 23 பாரா 6)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
ஆதி 22:5—ஆபிரகாம் ஈசாக்கை பலி கொடுக்கவிருந்தும், எதன் அடிப்படையில் அவரும் ஈசாக்கும் திரும்பிவரப் போவதாக அவர் தன்னுடைய வேலைக்காரர்களிடம் சொன்னார்? (w16.02 பக். 11 பாரா 13)
ஆதி 22:12—தேவைப்படும்போது மட்டும்தான் யெகோவா தன்னுடைய முன்னறிவைப் பயன்படுத்துவார் என்பதை இந்த வசனம் எப்படிக் காட்டுகிறது? (it-1-E பக். 853 பாரா. 5-6)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 22:1-18 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். உறுதியாகப் பேசுவது என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது சிற்றேட்டில் இருக்கிற 15-வது பாடத்தைக் கலந்துபேசுங்கள்.
பேச்சு: (5 நிமிடத்துக்குள்) it-1-E பக். 604 பாரா 5—பொருள்: கிறிஸ்து இறப்பதற்கு முன்பாகவே ஆபிரகாம் எப்படி நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்? (th படிப்பு 7)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 22
கீழ்ப்படிதல் நம்மைக் காப்பாற்றும்: (15 நிமி.) வருடாந்தர கூட்டம் 2017—பேச்சுகளும் 2018-க்கான வருடாந்தர வசனமும்—சில காட்சிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 41, 42
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 148; ஜெபம்