கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—பார்வையில்லாதவர்களுக்கு சாட்சி கொடுப்பது
ஏன் முக்கியம்: பார்வையில்லாத நிறைய பேர், புதிய ஆட்களிடம் பேசுவதற்குத் தயங்குவார்கள். அதனால், அவர்களுக்குச் சாட்சி கொடுப்பதற்குத் திறமை தேவை. பார்வையில்லாதவர்கள்மேல் யெகோவா அக்கறை வைத்திருக்கிறார். (லேவி 19:14) அதேபோல், நாம் எப்படி அவர்கள்மீது அக்கறை காட்டலாம்? யெகோவாவிடம் இருக்கிற பந்தத்தில் வளருவதற்கு அவர்களுக்கு உதவுவதன் மூலம் நாம் அக்கறை காட்டலாம்.
எப்படிச் செய்வது:
-
பார்வையில்லாதவர்களை “தேடிக் கண்டுபிடியுங்கள்.” (மத் 10:11) உங்களுக்கு அறிமுகமான ஒருவருடைய குடும்பத்தில் பார்வையில்லாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? பார்வையில்லாதவர்களுக்காகவே தயாரிக்கப்பட்டிருக்கிற பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பள்ளிகளோ, வயதானவர்களை அல்லது உடல்நிலை சரியில்லாதவர்களைக் கவனித்துக்கொள்கிற இல்லங்களோ, வேறு ஏதாவது அமைப்புகளோ உங்கள் ஊழியப் பகுதியில் இருக்கின்றனவா?
-
அக்கறை காட்டுங்கள். நட்போடு பழகும்போதும் உண்மையான அக்கறை காட்டும்போதும் பார்வையில்லாதவர்கள் சௌகரியமாக உணருவார்கள். அவர்களுடைய பகுதியில் இருக்கிற ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச முயற்சி செய்யுங்கள்
-
யெகோவாவிடம் நெருங்கிப் போக உதவுங்கள். பார்வையில்லாதவர்களுக்கு உதவ அமைப்பு நிறைய வடிவங்களில் பிரசுரங்களைத் தயாரித்திருக்கிறது. பார்வையில்லாதவர்களுக்கு எந்த வடிவத்தில் பிரசுரங்கள் தேவைப்படுகிறதோ, அதைப் பிரசுர ஊழியர் பிரசுரங்களுக்கான படிவத்தில் பூர்த்திசெய்துகொள்கிறாரா என்பதை ஊழியக் கண்காணி நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்