மார்ச் 9-15
ஆதியாகமம் 24
பாட்டு 87; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“ஈசாக்குக்கு ஒரு மனைவி”: (10 நிமி.)
ஆதி 24:2-4—யெகோவாவை வணங்குகிற ஒரு குடும்பத்திலிருந்து ஈசாக்குக்குப் பெண் எடுக்கச் சொல்லி ஆபிரகாம் தன்னுடைய ஊழியரை அனுப்பினார் (wp16.3-E பக். 14 பாரா 3)
ஆதி 24:11-15—ஆபிரகாமின் ஊழியர் கிணற்றுக்குப் பக்கத்தில் ரெபெக்காளைச் சந்தித்தார் (wp16.3-E பக். 14 பாரா 4)
ஆதி 24:58, 67—ஈசாக்கைக் கல்யாணம் செய்துகொள்ள ரெபெக்காள் சம்மதிக்கிறாள் (wp16.3-E பக். 14 பாரா. 6-7)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
ஆதி 24:19, 20—ரெபெக்காள் என்ன செய்தாள், இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? (wp16.3-E பக். 12-13)
ஆதி 24:65—ரெபெக்காள் ஏன் முக்காடு போட்டுக்கொண்டாள், இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? (wp16.3-E பக். 15 பாரா 3)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 24:1-21 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: பிரஸ்தாபி கேள்விகளை எப்படி நன்றாகப் பயன்படுத்தினார்? இயேசு யார் என்பதைப் பற்றி வீட்டுக்காரர் கொடுத்த பதிலுக்கு அவர் என்ன சொன்னார்?
முதல் சந்திப்பு: (2 நிமிடத்துக்குள்) இப்படிப் பேசலாம் பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 1)
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) இப்படிப் பேசலாம் பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 12)
நினைவுநாள் அழைப்பிதழ்: (3 நிமிடத்துக்குள்) இப்படிப் பேசலாம் பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். வீட்டுக்காரர் ஆர்வம் காட்டுகிறார். இயேசுவின் மரணத்தை நினைத்துப் பாருங்கள் என்ற வீடியோவை அறிமுகப்படுத்திவிட்டு அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (நடிப்பில் வீடியோவைப் போட்டுக் காட்ட வேண்டாம்) (th படிப்பு 11)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
மார்ச் 14, சனிக்கிழமையிலிருந்து நினைவுநாள் அழைப்பிதழைக் கொடுப்போம்: (8 நிமி.) கலந்துபேசுங்கள். எல்லாருக்கும் அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, கலந்துபேசுங்கள். அதை எப்படிக் கொடுக்கலாம் என்பதை விளக்கும் வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள். உங்கள் பகுதி முழுவதும் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள்.
“நான் யாரை அழைக்கப்போகிறேன்?”: (7 நிமி.) கலந்துபேசுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 43, 44
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 44; ஜெபம்